வளர்ச்சி என்பது துடிப்பு மிக்க மக்கள் பேரியக்கமாக மாறியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம் 

இதே நாளில் இந்தியாவை உருமாற்றும் பணிக்கான பயணத்தை தாங்கள் தொடங்கியதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி என்பது
வளர்ச்சி என்பது துடிப்பு மிக்க மக்கள் பேரியக்கமாக மாறியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம் 

புதுதில்லி: கடந்த 4 ஆண்டுகளில் வளர்ச்சி என்பது துடிப்பு மிக்க மக்கள் பேரியக்கமாக மாறியிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்க பதிவில், 2014-ஆம் ஆண்டு இதே நாளில் இந்தியாவை உருமாற்றும் பணிக்கான பயணத்தை தாங்கள் தொடங்கியதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி என்பது பேரியக்கமாக மாறியிருப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் 125 கோடி இந்தியர்களும் இணைந்து, இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைக்கும், ஆட்சி தொடர்வதற்கு உறுதுணையாக இருக்கும் மக்களுக்கு தலைவணங்குவதாகவும், இந்த அன்பும் ஆதரவுமே ஒட்டுமொத்த அரசின் வலிமை, ஊக்கத்திற்கு மிகப்பெரிய ஆதாரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் இந்திய மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய இருப்பதாகவும் அவர் உறுதி தெரிவித்துள்ளார். 

தங்களைப் பொறுத்தவரை இந்தியாவுக்கே முதன்மை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், புதிய இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கும் முடிவுகளை சிறந்த நோக்கம் மற்றும் நேர்மையுடன் தாங்கள் எடுத்திருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com