13 பேர் பலி எதிரொலி: வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச் சந்தையில் இருந்து விலக்க இங்கிலாந்தின் எதிர்க்கட்சி கோரிக்கை

வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களை லண்டன் பங்கு சந்தையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என இங்கிலாந்தின் எதிர்க்கட்சி கோரிக்கை
13 பேர் பலி எதிரொலி: வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச் சந்தையில் இருந்து விலக்க இங்கிலாந்தின் எதிர்க்கட்சி கோரிக்கை

லண்டன்: வேதாந்தா குழுமத்தின் நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என இங்கிலாந்தின் எதிர்க்கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தொடர்ந்து லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனம், தனது ஆலைகளுக்காக பொதுமக்களை அவர்களது வசிப்பிடத்தில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றுவதாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைப்பதாவும், சூழிலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இங்கிலாந்தின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதையடுத்து லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை விலக்க வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தி உள்ளது. 

ஏற்கனவே, மும்பை பங்கு சந்தைக்கு வேதாந்தா நிறுவனம் அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா நிறுவனத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால், லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்னையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

மனிதர்கள் உயிர்வாழ தேவையான சுவாசிக்கும் காற்றுக்கும், குடிக்கும் தண்ணீருக்கும் மதிப்பளிக்காமல் லாபத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவது வெறுக்கத்தக்து என கார்த்திக் கமலக்கன்னன் என்ற தமிழர் தெரிவித்துள்ளார்.

இது வெளிநாட்டு சதி என்று வேதாந்தா குழுமத்தின் 71 சதவீத பங்குகளை வைத்துள்ள அதன் தலைவர் அனில் அகர்வால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com