சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 13 வரை நடைபெற்றது.

கேள்வித்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதாரப் பாடத் தேர்வு ஏப்ரல் 25-ம் நாள் மீண்டும் நடைபெற்றது. இந்த சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வை 11 லட்சத்து 86 ஆயிரத்து 300 மாணவ-மாணவிகள் 4 ஆயிரத்து 138 மையங்களில் எழுதினார்கள். மேலும் தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரத்து 500 பேர் எழுதினர்.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக செயலர், அனில் ஸ்வரூப் தன், தனது ட்விட்டர்' பக்கத்தில், CBSE  தேர்வு முடிவு இன்று வெளியாகும் என அறிவித்திருந்தார்.

அதன்படி சற்று நேரத்திற்கு முன்பாக தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை கொண்டு http://WWW.cbse.nic.in, http://WWW.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com