ஜெயலலிதா பேசிய ஆடியோவும், கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறமுகசாமி
ஜெயலலிதா பேசிய ஆடியோவும், கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் ஜூன் 2-ந்தேதிக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு கூறி அனுப்பி விட்டனர். ஜெயலலிதாவின் சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். 

இவரை தொடர்ந்து ஜெயலலிதாவின் செயலாளராக இருந்த ராமலிங்கம், பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். 

இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தி மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய மருத்துவ குறிப்புகளையும் அவர் தாக்கல் செய்தார். 

அதில் அதிகாலை 5.05 மணி முதல் 5.35 மணிக்குள் காலை உணவு  காலை 5.45க்கு கீர்ன் டீ, காலையில் 4 இட்லி மற்றும் பிரட், மதிய உணவு 2 மணிக்கு வழங்க வேண்டும். மதிய உணவாக பாசுமதி அரிசி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக தெரிவித்தார். 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் -2 ம் தேதி அவர் 106.9 கிலோ எடை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார். 

மூச்சு திணறலுடன் ஜெயலலிதா பேசிய ஆடியோவை ஆணையத்தில் டாக்டர் சிவகுமார் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அளித்த வாக்குமூலத்தை இன்றைய குறுக்கு விசாரணையில் சிவக்குமார் மறுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com