தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை அடுத்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உயர்ந்து கொண்டே வருவது
தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை அடுத்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உயர்ந்து கொண்டே வருவது அனைத்து தரப்பினரையும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரிக்க பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து கொண்டே இருக்கிறது. இதுவும், இந்தியாவின் விலைவாசியை பாதித்துள்ளது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்று காலை 6 மணிக்கு அமலான புதிய பெட்ரோல், டீசல் விலை முறையே 15 காசுகள் மற்றும் 16 காசுகள் உயர்ந்துள்ளன. அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை 80.95 ரூபாய்க்கும், டீசல் விலை 72.74 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 80.80 ரூபாய்க்கும், டீசல் விலை 72.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்த தொடர் பொட்ரோல் விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com