துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார்

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார்

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நாளை தூத்துக்குடி செல்லவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்நிலையில் 100-வது நாள் போராட்டத்தை ஒட்டி, கடந்த 22ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். 

முன்னதாக 21ஆம் தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்து, அப்போதைய ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டார். ஆனால் பேரணி வன்முறையாக மாறி, துப்பாக்கிச்சூடு அளவிற்கு சென்றது. இதில் தற்போது வரை 13 பேர் பலியாகியுள்ளனர். 

பதற்றம் குறைந்ததன் காரணமாக, இன்று காலை 8 மணியுடன் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ஆளுங்கட்சியின் முதல் நபராக அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி ஆட்சியரை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர் பார்வையிட்டார். 

இந்நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார். அங்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com