தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி வீடியோ வெளியீடு 

தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி வீடியோ வெளியீடு 

சென்னை: தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் பதிவான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான 20 நிமிட காட்சிப் பதிவை தூத்துக்குடி காவல்துறை வெளியிட்டுள்ளது. 

அதில், போராட்டத்தின் போது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த போலீஸார் மீது கலவர கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தும் காட்சி இடம் பெற்றுள்ளன. மேலும் வன்முறைக்கும்பல் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறுவதும், போலீஸார் அச்சத்துடன் திரும்பி ஓடுவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

 முகத்தை மூடியபடி சிலர் கார்களுக்கு தீவைக்கும் காட்சி அதில் பதிவாகி உள்ளது. கல்வீசித் தாக்கும் நபர்கள் அந்த வீடியோவில் உள்ளனர். 

அந்த வீடியோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாகனங்கள் தாக்கப்படுகின்றன. சில இடங்களில் காட்சிகள் ஒட்டி வெட்டப்பட்டது போல உள்ளது. 

துப்பாக்கி சூடு நடந்து 4 நாட்களுக்குப் பிறகு சிசிடிவி காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர். போலீஸ் தரப்பு துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைத்துள்ளது. 

பொதுமக்கள் தரப்பு காட்சிகளை மட்டுமே காவல்துறை வெளியிட்டுள்ளது, மீதம் இருக்கும் காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்ததக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com