தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தான் தள்ளி வைத்துள்ளது: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தான் தள்ளி வைத்துள்ளது என்றும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் 
தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தான் தள்ளி வைத்துள்ளது: முதல்வர் பழனிசாமி


புதுதில்லி: தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தான் தள்ளி வைத்துள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

பிரதமரை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தில்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் சென்றனர். தில்லி சென்றடைந்த முதல்வருக்கு, விமான நிலையத்தில், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக எம்.பி.க்கள். வரவேற்பு அளித்தனர். 

பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அதிமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். 
 
இந்நிலையில், இன்று காலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகம் சென்று எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அரசியல் நிலவரம் மற்றும் மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கும்படியும், எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டை நினைவு கூரும் விதமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் ரயில் நிலையம் என பெயர் சூட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது. அதையும் நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,  இதுகுறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வமே தேவையான விளக்கம் அளித்துவிட்டதால், கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்த பின்பே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்ற முதல்வர், தமிழகத்தில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தான் தள்ளி வைத்துள்ளது என்றும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். 

மேலும், புகாருக்கெல்லாம் ராஜிநாமா செய்தால், யாருமே அமைச்சராக இருக்க முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com