மீ டூ கீழ் பாலியல் புகார்களை தெரிவிக்க தனி மின்னஞ்சல் முகவரி: தில்லி பெண்கள் ஆணையம் அறிவிப்பு

மீ டூ (நான் கூட) கீழ் பாலியல் புகார்களை தெரிவிக்க தனி மின்னஞ்சல் முகவரி ஒன்றை தில்லி பெண்கள் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. 
மீ டூ கீழ் பாலியல் புகார்களை தெரிவிக்க தனி மின்னஞ்சல் முகவரி: தில்லி பெண்கள் ஆணையம் அறிவிப்பு

 
புதுதில்லி: மீ டூ (நான் கூட) கீழ் பாலியல் புகார்களை தெரிவிக்க தனி மின்னஞ்சல் முகவரி ஒன்றை தில்லி பெண்கள் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. 

'மீ டூ' (நான் கூட) என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள், பிரபலங்கள் என பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சுட்டுரை மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் நடிகைகள் தனு ஸ்ரீ தத்தா, கங்கனா ராவத், பாடகி சின்மயி ஆகியோர் திரைத்துறையில் தாங்கள் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை அதில் குறிப்பிட்டு வருகிறார். தொடர்ந்து மீ டூ பாலியில் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் மூலம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.  

இந்நிலையில், மீ டூ கீழ் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள், metoodcw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கும் புகார்களும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களை சிறையில் அடைக்க உதவியாக இருக்கும் என நம்புவதாக தில்லி பெண்கள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையம் மற்றும் பெண்கள் ஆணையத்திடம் புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு உதவிக்காகவும் 181 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com