ஆப்கானிஸ்தான் தேர்தல் வன்முறையில் 13 பேர் பலி; 130 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இன்று நடைபெற்ற தோ்தல் தொடா்பான வன்முறைகளில் 13 போ் உயிரிழந்துள்ளனர். தாக்குதல்களைப்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று நடைபெற்ற தோ்தல் தொடா்பான வன்முறைகளில் 13 போ் உயிரிழந்துள்ளனர். தாக்குதல்களைப் பொருள்படுத்தாமல் ஏராளமான வாக்காளா்கள் வாக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறறது.

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் மாகாண பேரவைகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 

ஏற்கெனவே, அந்தத் தோ்தலை புறறகணிப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்திருந்தனா். மேலும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், வாக்களிப்பதைத் தவிர்க்கும்படியும் வேட்பாளர்களை அவர்கள் எச்சரித்திருந்தனர். 

இந்த நிலையில், திட்டமிட்டபடி வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதில் ஏராளமான வாக்காளா்கள் பங்கேற்று காலையிலேயே வரிசையில் நின்று, தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்தச் சூழலில், தலைநகர் காபூல், குண்டுஸ் மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணமான நாங்கர்ஹரில் எட்டு இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவர், போலீஸார் உள்பட 13 போ் உயிரிழந்ததாகவும், 130 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வன்முறை மற்றும் தோ்தல் பணிகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, வாக்குப் பதிவை நாளை ஞாயிற்றுக்கிழமை (அக். 21) வரை நீடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

தேர்தலை முன்னிட்டு 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com