பாஜக ஆட்சியில் தாக்குதலுக்கு பயந்து பெண்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் நடைபெறும் தாக்குதலுக்கு பயந்து பெண்கள் வெளியே சுதந்திரமாக நடமாட அச்சப்படுகிறார்கள் என்று
பாஜக ஆட்சியில் தாக்குதலுக்கு பயந்து பெண்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஹைதராபாத்: மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் நடைபெறும் தாக்குதலுக்கு பயந்து பெண்கள் வெளியே சுதந்திரமாக நடமாட அச்சப்படுகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டி உள்ளார். 

தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ள நிலையில், அந்தக் கட்சியின் ராகுல் காந்தி இன்று ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் ராஜீவ்காந்தி சத்பாவனாயாத்திரை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது, இந்த நாட்டில் இரு சித்தாந்தங்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று வெறுப்பை விதைப்பது, இரண்டாவது அன்பை பரப்புவது. இந்த இரு சித்தாந்தங்களுக்கு இடையேதான் சண்டை நடந்து வருகிறது. நாட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். 

இன்றுள்ள சூழலில் மக்களிடம் மதம், வாழிடம், பேசும் மொழி எது என்ற கேள்விகள் கேட்கப்படுகிறது. தலித்தாக இருந்தாலும், ஆதிவாசியாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் மிரட்டப்படுகிறார்கள். 

இன்று நாட்டில் உள்ள பெண்கள் வீட்டைவிட்டு அச்சப்பட்டுவெளியே வர யோசிக்கிறார்கள். வீட்டை விட்டுவெளியே வந்தால் தங்களுக்கு என்ன நடக்கும் எனத் தெரியாது. அந்தக் காரணத்துக்காக பெண்கள் வீட்டை விட்டுவெளியேவர யோசிக்கிறார்கள்.

இன்றுள்ள பிரதமர் மோடி நாட்டைப் பிரித்தாள முயற்சிக்கிறார், மக்கள் மனதில் வெறுப்பைப் பரப்புகிறார். அவரின் ஆதரவாளர்களும் வெறுப்பை விதைக்கிறார்கள்.

தான் ஆட்சிக்கு வரும் முன், நாடு தூங்கிக்கொண்டிருந்ததாவும், வளர்ச்சியே இல்லை என்று நாட்டை அவமானப்படுத்துகிறார் மோடி. 

நாட்டைப் பிரிக்க பாஜக முயற்சிப்பதால்தான் அவர்களை எம்ஐஎம் கட்சியும் ஆதரிக்கிறது. இந்த மாநிலம் பிரிக்கப்பட்டால் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைக்கிறது. பாஜகவும், எம்ஐஎம் கட்சிகளும் ஒரேமாதிரிதான் சிந்திக்கின்றன. இருகட்சிகளுக்கும் எதிராகவே நாங்கள் போரிடுகிறோம்.

தான் ஆட்சிக்கு வரும் முன், நாடு தூங்கிக்கொண்டிருந்ததாவும், வளர்ச்சியே இல்லை என்று நாட்டை அவமானப்படுத்துகிறார் மோடி. 

தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு தோல்வியை தழுவும். மத்தியில் ஆளும் மோடி அரசுக்கும் மக்களவைத் தேர்தலில் தோல்வி காத்திருக்கிறது என்றும் மோடியும், சந்திரசேகர ராவும் மக்களை ஏமாற்ற போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாக குற்றம்சாட்டினார்.

தெலங்கானா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழங்குடிகள் நலச் சட்டம் அமல்படுத்தப்படும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com