ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் பாதிப்பு 117-ஆக அதிகரிப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு மேலும் 8 பேர் ஆளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.  இதையடுத்து, அந்த மாநிலத்தில்


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு மேலும் 8 பேர் ஆளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.  இதையடுத்து, அந்த மாநிலத்தில் ஜிகா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகியோரின் எண்ணிக்கை 117-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் சுகாதாரத் துறை செய்தித் தொடா்பாளர் கூறுகையில், ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகிய 117 பேரில், தற்போது 98 பேர் உரிய சிகிச்சைக்குப் பிறகு வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டுள்ளனர். கா்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள், முதல் மூன்று மாதங்களில் ஜிகா வைரஸ் தாக்கத்துக்கு ஆளாவது தொடா்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்க செய்ய 5 போ் கொண்ட குழுவை மாநில சுகாதாரத் துறை அமைத்துள்ளது.

சாஸ்திரி நகா் பகுதியில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால், அப்பகுதியில் வைரஸை பரப்பும் லார்வாக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com