நாளை முதல் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர்
நாளை முதல் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


சென்னை: தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 412 நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படத் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த பயிற்சி மையங்கள் நாளை வெள்ளிக்கிழமை (செப் 7) முதல் செயல்படத் தொடங்கும். சுமார் 3200 ஆசிரியர்-ஆசிரியைகள் பயிற்சி அளிக்க உள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் இருந்து எத்தனை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத இருந்தாலும் அவர்கள் அண்டை மாநிலத்திற்கு சென்று தேர்வு எழுதும் நிலை இனி வராது.

ஜெ.இ.இ தேர்வை தமிழ் மொழியில் எழுத மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும் என்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com