பெட்ரோல் - டீசல் விலை கடும் உயர்வு!

​சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.61 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன 
பெட்ரோல் - டீசல் விலை கடும் உயர்வு!


சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.61 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன 

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 50 ஆக விற்பனை செய்யப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது விலை உயர்வுக்கு வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு மத்திய அரசு, மக்கள் விரோதப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர்.

எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது.

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கு பின் ஒரே நாளில் 4 ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இதையடுத்து அனைத்து தப்பில் இருந்தும் எழுந்த கன்டனங்களை அடுத்து பைசா கணக்கில் தினமும் உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல் விலை தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பயனை மக்களுக்குத் தராமல் வரியை உயர்த்தியதன் மூலம் மத்திய அரசு ஏற்கெனவே பல லட்சம் கோடி வருவாய் ஈட்டியது. இப்போது, பெட்ரோலியப் பொருள்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. 

இந்த சூழ்நிலையில் ஏற்கெனவே உயர்த்திய வரியை குறைப்பதுதான் நியாயம். ஆனால், சர்வதேச காரணிகளால் விலை உயர்ந்துவிட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது. இதனால், சாமானிய மக்கள், நடுத்தரப் பிரிவினர், விவசாயிகள், சிறு வணிகர்கள், போக்குவரத்து தொழிலை சார்ந்து இருப்பவர்கள் என நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டபோது, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசை கடுமையாக சாடி வரும் எதிர்க்கட்சிகள், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகின்றன. ஆனால், இப்போது வரை பாஜக அரசு அதை ஏற்கவில்லை.

இந்த நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 21 காசுகள் உயர்ந்து ரூ. ரூ.82.62 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61 காசுகள்  விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மக்கள், வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டீசல் மீதான கலால் வரி 2014-ஆம் ஆண்டில் ஒரு லிட்டருக்கு ரூ.3.46 ஆக இருந்தது. இப்போது, ரூ.15.33 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் மத்திய கலால் வரி 12 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவைதான் இப்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. 

ஆனால், சர்வதேச அளவில் நிலவும் சில பிரச்னைகளின் காரணமாகவே எரிபொருள்களின் விலை உச்சம் தொட்டிருப்பதாகவும், விலையேற்றம் தற்காலிகமான ஒன்றுதான் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com