பாரிஸ் நகரில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்தில் 7 பேர் படுகாயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் 2 பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் உள்பட
பாரிஸ் நகரில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்தில் 7 பேர் படுகாயம்


பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதில் 2 பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள் உள்பட 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பாரீஸ் நகரில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு தெருவில் மர்ம நபர் ஒருவர் இரவு 11 மணியளவில் தெருவில் சென்றவர்களை திடீரென 11 இன்ஞ் நீளமுள்ள கத்தியால் சரமாரியாக குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்ப்பாராத இந்த தாக்குதலால் பீதியடைந்த மக்கள் அவனது தலையை நோக்கி மெட்டல் பந்துகளை வீசி எறிந்து அவனது வெறிச்செயலை அடக்க முற்பட்டனர். 

மர்ம நபரின் வெறிச்செயலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களில் இரண்டு பேர் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்.

கத்தியால் குத்திய நபரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து  கத்தி மற்றும் இரும்பு கம்பியை பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் ஆப்கானிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் என தெரியவந்துள்ளது. 

தாக்குதலை நடத்தியவன் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த சில மாதங்களில் பாரீஸில் கத்தியால் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com