ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார்: அமைச்சர் சி.வி.சண்முகம்

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார்: அமைச்சர் சி.வி.சண்முகம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் முடிவெடுப்பார்


சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் முடிவெடுப்பார் என்று நம்புகிறோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், காமராஜ், அன்பழகன் உள்ளிட்டோரும் மரியாதை செய்தனர். 

பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி ஆளுநர் நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம். ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடவில்லை எனக் கூறினர்.

சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் புகார் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது. சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம் எனக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com