கருட சேவை: பக்தர்களின் வசதிக்காக வாகன நிறுத்த செயலி வெளியீடு

திருமலையில் நடைபெற உள்ள கருட சேவைக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கூகுள் வரைபடத்தின் உதவியுடன்
கருட சேவை: பக்தர்களின் வசதிக்காக வாகன நிறுத்த செயலி வெளியீடு


திருப்பதி: திருமலையில் நடைபெற உள்ள கருட சேவைக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த கூகுள் வரைபடத்தின் உதவியுடன் செயலி (மொபைல் ஆப் ) உருவாக்கப்பட்டுள்ளதாக திருப்பதி காவல்துறை எஸ்.பி. அபிஷேக் மொஹந்தி தெரிவித்தார்.

திருமலையில் இன்று திங்கள்கிழமை (செப்.17) இரவு கருட சேவை நடைபெற உள்ளது. அது தொடர்பான காவல்துறை அதிகாரிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் திருமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்ட நிறைவுக்குப் பின் எஸ்.பி. அபிஷேக் மொஹந்தி, செய்தியாளர்களிடம் கூறியது: 

திருமலைக்கு வரும் 16-ஆம் தேதி நள்ளிரவு முதல் மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கருட சேவை தினத்தில் திருமலையில் வாகன நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படும். திருமலையில் 7 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த 46 வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் வாகன நிறுத்த விவரங்களைத் தெரிந்து எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இதற்காக பிரத்யேக செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள நிறுத்தங்களில் வாகனங்கள் நிறைந்து விட்டால், மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1000 போலீஸார் அன்று கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com