அமெரிக்கா சீனா வர்த்தக போர்: சீனா மீது ரூ.14.5 லட்சம் கோடிக்கு அமெரிக்கா புதிய வரி விதிப்பு

சீன இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான புதிய கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார்.
அமெரிக்கா சீனா வர்த்தக போர்: சீனா மீது ரூ.14.5 லட்சம் கோடிக்கு அமெரிக்கா புதிய வரி விதிப்பு


வாஷிங்டன்: சீன இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான புதிய கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ளார்.

தொழில்நுட்ப கொள்கையில் ஏற்பட்ட போட்டி காரணமாக சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளும் 5,000 கோடி டாலர் மதிப்பில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரியை விதித்தன. இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் மேலும், 26,700 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருள்களுக்கு வரிகளை விதிக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியானது

இந்நிலையில், மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14.5 லட்சம் கோடி) மதிப்பிலான சீன பொருள்களுக்கான புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார்.  செப்டம்பர் 24 -ஆம் தேதி முதல் கூடுதல் வரி விதிப்பு 10 சதவீதமாகவும், ஜனவரியில் இருந்து 25 சதவீதமாகவும் அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

மேலும், சீனா தனது நியாயமற்ற வர்த்தகத்தை தொடர்ந்து பின்பற்றி வருவதால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது, தமது நிர்வாகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என தெரிவித்த டிரம்ப், இந்த வரிவிதிப்புக்கு பதில் நடவடிக்கையாக எங்களின் விவசாய பொருட்கள், தொழில்பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனாவும் கூடுதல் வரி விதிக்குமேயானால், நாங்கள் மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு 267 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வரியை கூட்டுவோம் என தெரிவித்துள்ளார். 

கூடுதல் வரி விதிப்பு பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், சீன கடல் உணவுகள், மரச்சாமான்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறிகையில், பல மாதங்களாக, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மாற்றிக்கொள்ள சீனாவை தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த புதிய வரி விதிப்பு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்தகைய வரி விதிப்பை சுமத்தியதன் மூலம், சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. 

"சீனா தனது பொருளாதாரத்தை வளர்க்க முயல்வதிலும், மக்களை வறுமையில் இருந்து மீட்க முயற்சி செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை, அது ஒரு நல்ல விஷயம், ஆனால், அவ்வாறு செய்யும்போது, ​​மற்ற நாடுகளுக்கு எதிராக வேண்டுமென்றே பாகுபாடு காட்டக்கூடிய நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்பின் விதிகளை முழுமையாக மீறுகின்ற செயல்களை ஈடுபடக் கூடாது என  கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன இறக்குமதிப் பொருள்கள் மீது புதிய வரிகளை விதிக்க தயாராகும் பட்சத்தில் சீனாவும் தனது உரிமையை பாதுகாத்துக் கொள்ள தக்க பதிலடி நடவடிக்கையில் நிச்சயம் ஈடுபடும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com