தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் செவ்வாய்கிழமை விலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.41 ஆக உள்ளது. டீசல் ஒரு லிட்டர் ரூ.78.10-ஐ எட்டியுள்ளது. தொடரும் 
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு


சென்னையில் செவ்வாய்கிழமை விலை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.41 ஆக உள்ளது. டீசல் ஒரு லிட்டர் ரூ.78.10-ஐ எட்டியுள்ளது. தொடரும் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

நாட்டிலேயே அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.89.54 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.78.42 ஆகவும் உள்ளது. தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.16 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.73.87 ஆகவும் உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பெட்ரோல் விலை 6 சதவீதமும், டீசல் விலை 8 சதவீதமும் அதிகரித்துள்ளது. 

தினந்தோறும் விலை உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசலின் வரலாறு காணாத விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் தாக்கம் ஏற்படுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

இந்நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வடைந்துள்ளது. சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.85.41 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.78.10 ஆகவும் அதிகரித்துள்ளது. 

மத்திய அரசு தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வரிகளை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அதற்கு ஆளும் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. 

ராஜஸ்தான், ஆந்திரம், கர்நாடக மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீது தாங்கள் விதிக்கும் வரியை சிறிது குறைத்து மாநில மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. எனினும், மத்திய அரசு கலால் வரியை குறைத்தால் மட்டுமே நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். ஏனெனில் பெட்ரோல், டீசல் விலையில் ஏறக்குறைய பாதி அளவுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான் உள்ளன. ஆனால், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களைக் கூறி பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரியைக் குறைத்து மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

சாமானிய, நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த விலை உயர்வுப் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு எந்த வகையான நடவடிக்கையை எடுக்க இருக்கிறது என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com