அசாமில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 6 பேர் பலி: ஒருவர் காயம்

அசாம் மாநிலத்தில் உள்ள குளம் ஒன்றில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற உள்ளூரைச் சேர்ந்த 6 பேர்
அசாமில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் 6 பேர் பலி: ஒருவர் காயம்


அசாம் மாநிலத்தில் உள்ள குளம் ஒன்றில் உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற உள்ளூரைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள கவுடோல் என்ற குளத்தில் 11 ஆயிரம் வோல்ட் மின் அழுத்தம் பாயும் உயர் மின் அழுத்தக்கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. குளத்தில் மின்சாரம் பாய்ந்ததால் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்தது.  

இந்நிலையில், இன்று காலை குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது.
 
இதையடுத்து மின்சாரம் தடை செய்யப்பட்டுவிட்டதாக என நம்பி அப்பகுதியைச் சேர்ந்தோர் குளத்தில் மீன் பிடிக்க முயற்சித்தபோது, திடீரென அந்த மின்கம்பி வழியே மின்சாரம் பாய்ந்து குளத்தில் இருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனை கண்ட உள்ளூர் மக்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்தும் முடியாததால், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகோன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து வருத்தம் தெரிவித்த அம்மாநில முதல்வர் சர்பனந்தா சோனோவால், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு  உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com