கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம்

முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ், வேலூர் சிறைக்கு
கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம்


சென்னை: முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார்.  

திருவாடனைத் தொகுதி எம்எல்ஏ கருணாஸ், நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கடந்த 16-ஆம் தேதி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அந்த அமைப்பின் தலைவர் நடிகரும், திருவாடனைத் தொகுதி எம்எல்ஏ-வுமான கருணாஸ் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்டோரை மிகவும் அவதூறாக பேசினார்.

இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது கூட்டுச் சதி, வன்முறையை தூண்டி விடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 சட்டப் பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100க்கும் மேற்பட போலீஸார் வந்தனர். இதையடுத்து போலீஸார் கருணாஸை கைது செய்தனர்.

அவரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், எழும்பூர் 13-ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கருணாஸ் கைது குறித்து பேரவைத் தலைவரிடம் தெரிவித்ததாக நீதிபதியிடம் காவல்துறையினர் கூறினர்.

கொலை முயற்சி வழக்கு (307-வது பிரிவு) நீக்கப்பட்டு எம்எல்ஏ கருணாஸ் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கருணாஸ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கருணாஸ் தரப்பில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவருடைய வழக்குரைஞர் ராஜா தெரிவித்தார். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட எம்எல்ஏ கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார். அவர் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார்.  அவர் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com