இமாச்சலில் தொடரும் கனமழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

இமாச்சலில் தொடரும் கனமழை: 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பனிப்பொழிவால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அடுத்து 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திங்கள்கிழமை (செப்.24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இமாச்சலப்பிரதேசத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் திக்குமுக்காடிய இமாச்சலப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கர புரண்டோடும் வெள்ளத்தில் பஸ்,லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. மனாலி அருகே சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளநீரில் சுற்றுலா பேருந்து ஒன்று அடித்து செல்லப்பட்டதாகவும், பஸ்ஸில் பயணிகள் யாரும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் குளு, மண்டி, கின்னவுர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், ஆறு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குளு மாவட்ட துணை ஆணையாளர் யூனுஷ் கான் கூறினார். 

மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் கனமழை காரணமாக, பல சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், பல பகுதிகளில் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டோபி-ஃபோஜல் பகுதியில் இருந்து 19 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்புக்குழுவினர் இன்று மீட்டுள்ளனர். 

இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் குளு மற்றும் மனாலி என மாநிலத்தின் பல பகுதிகளில் இன்றும் தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக குளு, கின்னார், சம்பா, காங்க்ரா, பிலாஸ்பூர், சிர்மார், மாண்டி மற்றும் சிம்லா உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திங்கள்கிழமை (செப்.24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com