மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி

மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி

மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது, தற்போதைய அதிபர் யாமீன் அப்துல்


மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது, தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூமை வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாலத்தீவில் நேற்று அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் யாமீன் அப்துல் கயூம், மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார். 

அவரை எதிர்த்து இலங்கையில் வசித்து வரும் முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால், பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது(54) போடியிட்டார். 

நேற்று நடைபெற்ற வாக்குப் பதிவில் 92 சதவிகித வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. இந்திய பெருங்கடலில் உள்ள மாலத்தீவில் சமீப காலமாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள சூழலில், அமெரிக்காவும், இந்தியாவும் இந்த தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்தது. 

இதில், வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இருந்தே அதிபர் அப்துல்லா யாமீன் பின்னடைவை சந்தித்து வந்தார். எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டு இருந்த இப்ராகீம் முகம்மது பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். மொத்த வாக்காளர்களில் 58.3 சதவீத வாக்குகள் பெற்று இப்ராகீம் முகம்மது வெற்றி பெற்றதாக மாலத்தீவு தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இப்ராகிம் முகமது 1,34,616 வாக்குகளும் வாக்குகளும், யாமீன் 95,526 வாக்குகளும் பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியது. 

எனினும், தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு செப்டம்பர் 30க்குள் அறிவிக்கப்படும் எனவும், தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் கட்சிகள் இந்த ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் எனவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் 58 புள்ளி 3 விழுக்காடு வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மாலத்தீவில் அரசியல் காரணங்களால் எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்ராகீம் முகம்மது வெற்றியை அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com