எஸ்.வி சேகர் நாடகத்தில் பேசுவதை போல பேசுகிறார்: தமிழிசை விமர்சனம்

நடிகர் எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசி இருப்பதாக தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். 
எஸ்.வி சேகர் நாடகத்தில் பேசுவதை போல பேசுகிறார்: தமிழிசை விமர்சனம்


சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் நாடகத்தில் பேசுவதாக நினைத்து பேசி இருப்பதாக தமிழிசை விமர்சனம் செய்துள்ளார். 

நேற்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், தமிழக பாஜக தலைமையை நீங்கள் ஏற்கவில்லை என்ற கருத்து உள்ளதால் செயற்குழுவுக்கு உங்களை அழைக்கவில்லை என்கிறார்களே என்ற கேள்வி எழுப்பினர்.

கேள்வியை தவறாகப் புரிந்து கொண்ட எஸ்.வி.சேகர், பாஜக தலைமையை ஏற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொண்டு இப்போது உள்ள வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை என்னால் உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் மீண்டும் அழுத்தமாக பாஜக தலைமையை நீங்கள் மதிக்காமல் இருப்பது போன்ற தோற்றம் உள்ளதே என கேட்டனர்.

பின்னர், அப்படியா கேட்டீர்களா? என்றவர் அழைத்தால் தான் போக முடியும். நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பது என்ன எனக்கு புரியவில்லை. அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நின்று அக்கா நான் வந்துட்டேன்னு சொல்லட்டுமா? அவங்க எனக்கு வயசுல சின்னவங்க அப்படியே சொல்லணும் என்றால் தங்கச்சி என்றுதான் கூறவேண்டும் என்று தெரிவித்தார். 

எஸ்.வி. சேகரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கட்சிக்குள்ளேயே குழப்பம் ஏற்படுத்தியது. 

எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழிசை கூறியதாவது: எஸ்.வி.சேகர் பல சிரிப்பு நாடகத்துல நடிச்சு நடிச்சு, நாடகம்னு நினைச்சு பேசிட்டார் போல, பாஜக தலைவர்னா அவ்வளவு லேசான விஷயமாக நினைத்துவிட்டார் அவர்'' என்று பதில் அளித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் சோபியா பிரச்னையில் சிக்கி பிரச்னைக்கு உள்ளான தமிழிசை, எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தவறாக பேசி பிரச்னைக்கு உள்ளானார்.

தற்போது எஸ்.வி.சேகரின் பேச்சால் பிரச்னை உருவாகி உள்ளதாகவும், அதனை தமிழிசை எப்படி சமாளிக்க போகிறார் என்றும் தமிழக பாஜகவிற்கு போதாத காலமா? தமிழிசைக்கு போதாத காலமா? என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com