உயரதிகாரிகளின் அடக்குமுறைகளைப் பதிவு செய்யும் ராணுவ வீரர்களுக்கான வாட்ஸ் அப் எண்ணில் இதுவரை பதிவான குற்றச்சாட்டுகள் 292!

குறிப்பிட்ட அந்த வாட்ஸ்- அப் எண்ணில் சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளைப் பற்றிய குற்றச்சாட்டுகளை, ராணுவ வீரர்கள் தாங்களே பதிவு செய்து அதை நேரடியாக ராணுவத் தலைமை அதிகாரிக்கே அனுப்பலாமாம்
உயரதிகாரிகளின் அடக்குமுறைகளைப் பதிவு செய்யும் ராணுவ வீரர்களுக்கான வாட்ஸ் அப் எண்ணில் இதுவரை பதிவான குற்றச்சாட்டுகள் 292!

ராணுவ வீரர்கள், மிகக் கடுமையான தங்களது மேலதிகாரிகளால் தங்களுக்கு நேரும் மனக் கஷ்டங்களையும், உளவியல் பிரச்சினைகளையும் பற்றி வெளிப்படையாக முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவு செய்யக் கூடாது எனும் கட்டுப்பாடு கடந்த ஃபிப்ரவரி மாதம் முதல் அமலில் இருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டிற்கு மாற்றாக, இந்திய ராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ள பிபின் ராவ்த் கடந்த ஃபிப்ரவரி மாதம், ராணுவ வீரர்கள் தங்களது மேலதிகாரிகளைப் பற்றிய குறைகளைப் பதிவு செய்வதற்காக புதிதாக வாட்ஸ்- அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தார். அந்த வாட்ஸ்- அப் எண்ணிற்கு இது வரை வந்து குவிந்துள்ள குற்றச்சாட்டுப் பதிவுகள் எத்தனை தெரியுமா? கிட்டத்தட்ட 300 ஐத் தொடப் போகிறதாம். இது வரை சுமார் 292 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளதாக செய்தி.
 
குறிப்பிட்ட அந்த வாட்ஸ்- அப் எண்ணில் சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளைப் பற்றிய குற்றச்சாட்டுகளை, ராணுவ வீரர்கள் தாங்களே பதிவு செய்து அதை நேரடியாக ராணுவத் தலைமை அதிகாரிக்கே அனுப்பலாமாம். 

உலக நாடுகளிலேயே மூன்றாவது மிகப்பெரிய ராணுவமாகக் கருதப்படுவது நமது இந்திய ராணுவம் தான். இந்த புதிய வாட்ஸ்- அப் எண் அணுகுமுறை மூலமாக மோசமான ராணுவ உயரதிகாரிகளின் கடுமையான நடவடிக்கைகள் மாறுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் காண வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com