திருமணத்தின் போது ஆங்கிலம் பேசத் தெரியாது... ஆனால் இன்றோ பிரிட்டனில் ‘ஆண்டின் மிகச் சிறந்த வணிகப் பெண்மணி’!

30,000 மாணவர்கள் பயிலும் நாட்டிஹாம்ஷையர் பல்கலைக்கழகத்தின் தரமான கல்வியை வழங்க ஆஷா முன்னெடுத்த பல நடவடிக்கைகளைப் பாராட்டி 2014 ஆம் வருடம் அவருக்கு ‘Dame Commander of the Order of the British Empire' 
திருமணத்தின் போது ஆங்கிலம் பேசத் தெரியாது... ஆனால் இன்றோ பிரிட்டனில் ‘ஆண்டின் மிகச் சிறந்த வணிகப் பெண்மணி’!

பிரிட்டனில் ‘ஆண்டின் மிகச் சிறந்த வணிகப் பெண்மணி’ யாக தேர்வு செய்யப்பட்டார் இந்திய வம்சாவளிப் பெண்மணி டேம் ஆஷா கெம்கா!

டேம் ஆஷா கெம்கா; பிகாரைச் சேர்ந்த இந்தியப் வம்சாவளிப் பெண்மணி பிரிட்டனில் ‘ மிகச் சிறந்த வணிகப் பெண்மணியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஷாவின் பெயருக்கு முன்புள்ள ‘டேம்’ எனும் அடைமொழி நம் ஊர் ‘சர்’ பட்டம் போல பிரிட்டிஷ் அரசாங்கம் தனது நாட்டில் செயற்கரிய செயல்களைச் செய்பவர்களுக்கு வழங்கும் மிக உயரிய பட்டமாம். திருமணமாகி தனது 25 வது வயதில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிகாரில் இருந்து பிரிட்டனுக்குப் பயணித்த போது ஆஷாவுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. பிரிட்டன் வந்த சேர்ந்தவர் அதற்குப் பிறகு தான், தன் வாழ்க்கை ஆரம்பமானதாக எடுத்துக் கொண்டு ஆங்கிலம் கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் முனைந்தார்.

முதலில் குழந்தைகளுக்கான தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து ஆங்கிலத்தில் பேசிப் பழகத் தொடங்கினார். பின்னர் மொழி என்பது வெறுமே கற்றுக் கொள்வது மட்டுமல்ல, தொடர்ச்சியான பயிற்சியில் மட்டுமே அதை முறையாகப் பேச முடியும் என்றுணர்ந்து தன்னைப் போலவே முறையாக ஆங்கிலம் பேச ஆசைப்படும் அம்மாக்களை ஒன்றிணைத்து ஒரு குழுவைத் தொடங்கி ஆங்கிலம் கற்று ஒரு கட்டத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஆனார் என்கிறது அவரைப் பற்றிய இணையக் குறிப்புகள். விரிவுரையாளராக ஆவதற்கு முன்பே பிரிட்டன் கார்டிஃப் பல்கலைகழகத்தின் வணிக நிர்வாகப் பிரிவில் ஆஷா டிகிரி பட்டம் பெற்றார்.

ஆஷாவின் தொடர் உழைப்பும், மேலும் மேலுமென மிகுந்திருந்த கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இன்று அவரை பிரிட்டன் நாட்டிங்ஹாம்ஷையர் கல்லூரியின் பிரின்சிபல் மற்றும் சிஇஓ வாக ஆக்கியிருக்கிறது. 30,000 மாணவர்கள் பயிலும் நாட்டிஹாம்ஷையர் பல்கலைக்கழகத்தின் தரமான கல்வியை வழங்க ஆஷா முன்னெடுத்த பல நடவடிக்கைகளைப் பாராட்டி 2014 ஆம் வருடம் அவருக்கு ‘Dame Commander of the Order of the British Empire' எனும் பெருமைக்குரிய பட்டம் வழங்கப் பட்டது. இது பிரிட்டனின் கெளரவத்திற்குரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று.

Image courtsy: Financial express

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com