சிறந்த பத்திரிகையாளர்களுக்கான புலிட்ஸர் விருது இந்த ஆண்டு யார் யாருக்கு?

அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘செய்தி நிறுவனங்களை பொது மக்களின் எதிரிகள்’ எனக் குறிப்பிட்ட நிலையிலும் சிறந்த பத்திரிகையாளர்கள் புலிட்ஸர் விருதுகளால் கெளரவிக்கப்பட்டிருப்பது அவர்களது திறமைக்கான வெகுமதி
சிறந்த பத்திரிகையாளர்களுக்கான புலிட்ஸர் விருது இந்த ஆண்டு யார் யாருக்கு?

வருடம் தோறும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கான புலிட்ஸர் விருது அறிவிக்கப்படும், இந்த வருடம் யார் யாரெல்லாம் விருது பெறப்போகிறார்கள் என்று பார்ப்போமா?

பெஸ்ட் ஃபியூச்சர் ரைட்டிங், பெஸ்ட் ஸ்பெஷல் ரிப்போர்ட்டிங், மற்றும் பெஸ்ட் பிரேக்கிங் நியூஸ் ஃபோட்டொகிராபி எனும் மூன்று விதமான கேட்டகிரிகளில் நியூயார்க் டைம்ஸுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் காவல்துறையுடன் இணைந்து செயலாற்றிக் கண்டறிந்த விசயங்களில் கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து அண்டை நாட்டிலிருந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினர் கூட்டாகவோ அன்றி தனியாகவோ வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிய வந்தது. அவர்களது வீடுகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவது ஆதார பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் இதுவரை பதிவான 1100 நியூஸன்ஸ் வழக்குகளில் பெரும்பான்மையானவை சிறுபான்மையினரை தாக்கும் மனப்பான்மையில் வலிந்து உருவாக்கப் பட்டு பதிவானவை என்பது புலனாய்வில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக வேண்டுமென்றே வலிந்து போடப்பட்ட நியூஸன்ஸ் வழக்குகள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் சீரமைக்கபடும் என நியூயார்க் காவல்துறை அறிவித்துள்ளது. இச்செயலுக்காக நியூயார்க் டைம்ஸ்க்கு புலிட்ஸர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்ல வாஷிங்டன் போஸ்ட்டுக்காக அதிபர் தேர்தல் சமயத்தில் டொனால்ட் ட்ரம்பின் சாரிட்டபிள் டிரஸ்ட் குறித்து திறம்பட நேஷனல் ரிப்போர்டிங் செய்ததைப் பாராட்டி டேவிட் A.Farenthold க்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் பத்தி எழுத்தாளர் பெக்கி நூனனுக்கு சிறந்த கருத்தாளுநர் விருது வழங்கப்பட்டுள்ளது. கோல்ஸன் வொயிட் ஹெட்ஸின் வன் புனைவு நாவலான ‘தி அண்டர் கிரவுண்ட் ரயில்ரோட்’ எனும் நாவலுக்கு சிறந்த புனைவு நாவலுக்கான புலிட்ஸர் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

அடிமையாக விற்கப்பட்ட இளம்பெண்ணொருத்தி ஜியார்ஜியாவில் இருந்து பாதாள ரயில் மார்க்கமாக தப்பி ஓடுவதாகச் சித்தரிக்கும் இந்த நாவல் கடந்தாண்டின் நேஷனல் புக் அவார்டும் வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது நாவலுக்கு புலிட்ஸர் விருது கிடைத்திருப்பது குறித்து, இந்த அறிவிப்பு ‘என்னைத் திடுக்கிட வைத்த ஆச்சாரியமான அற்புதம்’ என நியூயார்க் நாளிதழ்களில் பகிர்ந்திருக்கிறார் 47 வயதான வொயிட் ஹெட்.

சிறந்த விளக்கங்களுடன் கூடிய தெளிவான ரிப்போர்டிங்க்குகளுக்கான விருது இண்டர்நேஷனல் கன்சோரிட்டம் ஆஃப் இன்வெஸ்டிகேட்டிவ் பத்திரிகையாளர்களான மெக்கிளாட்ஸி மற்றும் மியாமி ஹெரால்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச வரி விதிப்பு மற்றும் பனாமா பேப்பர் விவகாரம் உள்ளிட்ட செய்திகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் தெளிவான விளக்கங்களுடன் கையாண்டதற்காக இவ்விருது இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வெர்ஜீனியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி அங்கிருந்த மக்களைச் சீரழித்த்க் கொண்டிருந்த ஓபியம் போதைப் பொருள் புழக்கத்தின் அடி வரை சென்று ஆராய்ந்து அது சார்ந்த உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டிய எரிக் இயரிக்கு சிறந்த புலனாய்வு பத்திரிகையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘செய்தி நிறுவனங்களை பொது மக்களின் எதிரிகள்’ எனக் குறிப்பிட்ட நிலையிலும் சிறந்த பத்திரிகையாளர்கள் புலிட்ஸர் விருதுகளால் கெளரவிக்கப்பட்டிருப்பது அவர்களது திறமைக்கான வெகுமதி என்று தான் கூறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com