ஜாதவுக்கு உடனடியாக தண்டனை இல்லை, கருணை மனு அனுப்ப 60 நாட்கள் அவகாசம்!

இந்தியர் ஜாதவுக்கு உடனடியாக தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவஜா முகமது ஆஸிப் தெரிவித்துள்ளார். 
ஜாதவுக்கு உடனடியாக தண்டனை இல்லை, கருணை மனு அனுப்ப 60 நாட்கள் அவகாசம்!

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் ஜாதவுக்கு உடனடியாக தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவஜா முகமது ஆஸிப் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்த வழக்கில்; ஜாதவ் சார்பாக அவரது குடும்பத்தினர் சமர்பித்துள்ள மூன்று மேல்முறையீட்டு மனுக்கள் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் இருப்பதாகவும். 

பாகிஸ்தானில் ரிசர்ச் மற்றும் அனாலிசிஸ் விங்கில் பணிபுரிந்த குல்பூஷன் ஜாதவ், இந்திய உளவாளியாகச் செயல்பட்டு பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி பாகிஸ்தான் அரசு பலுசிஸ்தானில் கடந்த 2016 ஆன் ஆண்டு மார்ச் மாதத்தில் அவரைக் கைது செய்தது. 

இந்திய உளவாளியாகச் செயல்பட்டு, பாகிஸ்தானில் தீவிரவாதத்தைத் தூண்டி, நாட்டின் ஸ்திரத் தன்மையை குழைக்க முயன்றதாகக் கூறி அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டு மரண தண்டனை அறிவித்தது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம்.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமை மற்றும் அந்நாட்டு ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பி மரண தண்டனையிலிருந்து விடுபடும் முயற்சியை செய்ய ஜாதவுக்கு 60 நாட்கள் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த 60 நாட்களுக்குள் ஜாதவ் சார்பாக கருணை மனுக்கள் அனுப்பலாம் எனவும் ஆஸிப் தெரிவித்துள்ளார்.

ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அதை ‘பாகிஸ்தானின் திட்டமிட்ட கொலை’ என்று இந்தியா குற்றம் சுமத்தி இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் பாகிஸ்தான் அரசு நாட்டின் இறையாண்மைக்கு கட்டுப்பட்டு சட்டப்படி தான் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com