இவர்களே ஒளிரும் இந்தியாவின் உதாரண புருஷர்கள்!

மலை மலையாகக் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்ற வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம். இதோ மகாராஷ்டிராவில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருக்கிறது அதற்கான வழி!
இவர்களே ஒளிரும் இந்தியாவின் உதாரண புருஷர்கள்!

மலை மலையாகக் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அகற்ற வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் நாம். இதோ மகாராஷ்டிராவில் இருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தில் இருக்கிறது அதற்கான வழி! இங்கே அந்தப் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு தண்ணீரை தேக்கி வைத்திருக்கிறார்கள். அதெப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா? பருவ மழைக்காலங்களில் வல்னியில் இருக்கும் 30 குளங்கள் மற்றும் ஏரிகளில் தேக்கப்படும் தண்ணீரானாது, எப்போது வேண்டுமானாலும் தீர்ந்து விடலாம் எனும் நிலை தான் இங்கு நீடிக்கிறது. ஏனெனில் கோடை காலத்தில் இந்த கிராமத்தின் வறண்ட மண் வெகு சீக்கிரத்தில் தேக்கப்பட்ட தண்ணீரை உறிஞ்சி விடுகிறது. அதைத் தடுக்க என்ன செய்வது என்று யோசித்த கிராம மக்கள் கண்டறிந்த உபாயம் தான் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்துவது என்பது.

என்ன குழப்பமாக இருக்கிறது. குழம்ப வேண்டிய அவசியமே இல்லை. அதாவது ரேப்பர்கள் மற்றும் பாலீதீன் கவர்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு சுத்தப் படுத்தப் பட்டு ஒன்றாக்கி மிகப்பெரிய தார்பாய்கள் போன்ற பெரிய பெரிய ஷீட்டுகளாக தைக்கப்படுகின்றன. இந்த ஜெயண்ட் சைஸ் பாலிதீன் ஷீட்டுகள் இப்போது குளங்களின் அடிப்பகுதியில் தண்ணீர் உறிஞ்சப் படுவதை தவிர்க்கும் வண்ணம் மேலே கவர் செய்யப்படுகிறது. அவை காற்றுக்கு அகன்று பறக்காமல் இருக்க 1 அடி நீளத்திற்கு மணல் கொட்டப்பட்டு அந்த ஷீட்டுகளின் பறக்காத தன்மை உறுதி செய்யப்படுகிறது. இப்போது இந்த ஷீட்டுகள் தேக்கப்பட்ட தண்ணீரை நிலம் உறிஞ்சாமல் தடுக்கிறது. டிசம்பருக்கு முன்பே குளங்களும், ஏரிகளும் வறண்டு போவதைத் தடுக்க இதைத் தவிர வேறென்ன தான் செய்வது? இப்போது பிளாஸ்டிக் ஷீட்டுகளின் உதவியால் தேக்கப்பட்ட தண்ணீரால் மே மாதம் வரை கிராம மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

வல்னி கிராம மக்களின் இந்த சீரிய முயற்சியை வீடியோ வடிவில் காண...

இப்படித்தான் இந்த கிராம மக்கள் தங்களது தண்ணீர் தேவையைச் சமாளிக்கிறார்கள்... இல்லையில்லை சமாளிக்கிறார்கள் என்பதை விட சாதிக்கிறார்கள் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். 

ஆம் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கதையாக குப்பைகளை அகற்றுவதையும், தண்ணீர் சேமிப்பையும் ஒரே சமயத்தில் வெற்றிகரமாக கையாண்டு தங்களது பிரச்னையை எளிதாகத் தீர்த்துக் கொண்டுள்ளார்கள் இந்த மக்கள். இப்படிப்பட்ட சாமர்த்தியசாலிகளான கிராம மக்களை எப்படிப் பாராட்டினாளும் தகும். நாம் வேண்டுமானால் அவர்களுக்கு உதாரண புருஷர்கள் என்ற பட்டம் தந்து விடலாம். சரி தானே?! பொருத்தமாக இருக்கும்.

இந்தக் கிராமம் மகாராஷ்டிராவில் நாக்பூருக்கு அருகில் இருக்கிறது.

Article concept courtsy: the better india facebook group.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com