வட கொரியாவுக்கெதிரான போருக்கு ஆயத்தமாகிறதா அமெரிக்கா?!

கடந்த வாரத்தில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்; தமது சமீபத்திய கண்டுபிடிப்பானது, அமெரிக்காவின் எந்த மூலையில் இருக்கும் இலக்கையும் திட்டமிட்டுத் துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய திறன் வாய்ந்தது என
வட கொரியாவுக்கெதிரான போருக்கு ஆயத்தமாகிறதா அமெரிக்கா?!

அமெரிக்காவுக்கு தீராதலைவலியாக மாறிக் கொண்டிருக்கும் வடகொரியாவைக் கண்டு தினம், தினம் தூக்கமிழந்து கொண்டிருக்கிறார் அதிபர் டிரம்ப். அந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த அறிவிப்பு! 

‘தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் புதிய அணு ஆயுதச் சோதனை என்ற பெயரில் வடகொரியா தினம், தினம் புதுப்புது குடைச்சல்களை துவக்கிக் கொண்டே இருந்தால் அதை இனியும் அமெரிக்கா பொறுப்பதாக இல்லை, உடனடியாகப் போரைத் துவக்கி உலக வரைபடத்தில் வட கொரியா என்ற ஒரு தேசத்தையே காணாமலாக்கி விடும்’ முடிவிலிருக்கிறது அமெரிக்கா’ எனும் சூளுரை!

டிரம்ப் அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க சட்டமன்ற உறுப்பினராகத் திகழும் லின்ட்சே கிரஹாம், மேற்கண்ட எச்சரிக்கையை; அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் விதிகளுக்கு உட்பட்டு NBC ஷோ வில் அறிவித்துள்ளார். அதன் மூலம் வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைகளை மட்டுமல்ல வடகொரியாவையே முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விட முடியும். எனவும் லிண்ட்சே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்; தமது சமீபத்திய கண்டுபிடிப்பானது, அமெரிக்காவின் எந்த மூலையில் இருக்கும் இலக்கையும் திட்டமிட்டுத் துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய திறன் வாய்ந்தது என பெருமை அடித்துக் கொண்டார். 

உலகின் சக்திவாய்ந்த நாடுகள், பியாங்யாங்கின் ஆயுதத் திட்டங்களையும், அணு ஆயுதச் சோதனைகளையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியால் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் மூலமாக தொடர்ந்து கட்டுப்படுத்த முயன்று வருகின்றன. ஆனால் வடகொரியாவைப் பொறுத்தவரை அந்த முயற்சி தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்து கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்கா மிகுந்த விரக்தியிலிருக்கிறது.

வடகொரியாவின் அண்டை நாடான சீனா, ராஜதந்திர முறையிலாவது வடகொரியாவின் குள்ளநரித்தனத்தை தடுத்து நிறுத்த முயலாவிட்டால், பின்னர் அமெரிக்கா தன் விருப்பமின்றியே வடகொரியாவுக்கெதிரான போரை அறிவிக்க நேரும் சூழல் தற்போது நிலவுகிறது.

ICBM உடன் இணைந்து கொண்டு வடகொரியா தொடர்ந்து அமெரிக்கா மீது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவ முயலும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்குமாயின் டிரம்ப் இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்.
 
அண்டை நாடானா சீனாவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது வடகொரியாவை சமரசப்படுத்த. ராணுவ முறையிலோ, அல்லது ராஜதந்திர முறையிலோ ஏதோ ஒரு உபாயத்தைக் கையாண்டு அதன் ஆணு ஆயுத ஏவுகணைச் சோதனை முயற்சிகளுக்கு சீனா முட்டுக்கட்டை போட்டே தீரவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காரணத்தை மட்டுமே முன் வைத்து அமெரிக்கா போரைத் துவக்க தயங்காது.


சீனா இவ்விஷயத்தில் ராஜ தந்திர முறையைக் கையாண்டு வெற்றி கொள்ளும் என நான் நம்புகிறேன். என லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com