தாயை வணங்க மாட்டீர்கள் எனில் வேறு யாரை வணங்கப் போகிறீர்கள்? அப்ஸல் குருவையா? வெங்கய்ய நாயுடு கேள்வி!

இந்தியாவில் பலருக்கும் வந்தேமாதரம் என்று சொல்வதில் என்ன சிக்கலோ தெரியவில்லை. கேட்டால் தேசியம் என்ற பெயரில் இந்துத்வாவைத் திணிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள்.
தாயை வணங்க மாட்டீர்கள் எனில் வேறு யாரை வணங்கப் போகிறீர்கள்? அப்ஸல் குருவையா? வெங்கய்ய நாயுடு கேள்வி!

வந்தே மாதரம் என்றால் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று பொருள். தேசியம் என்றால் என்னவென்று கேட்டவர்களுக்கு வெங்கய்ய நாயுடு பதிலடி.

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான அசோக் சிங்காலின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வொன்றில் பேசிய போது மேற்கண்ட விளக்கத்தைக் கூறினார் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

வெங்கய்ய நாயுடுவின் உரையைக் காண...

இந்தியாவில் பலருக்கும் வந்தேமாதரம் என்று சொல்வதில் என்ன சிக்கலோ தெரியவில்லை. கேட்டால் தேசியம் என்ற பெயரில் இந்துத்வாவைத் திணிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள்.

உண்மையில் வந்தே மாதரம் என்பதில் இந்துத்வாத்தனம் எங்கிருக்கிறது. வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணை வணங்குகிறோம் என்று தான் பொருள்./ இந்தியாவில் பிறந்து விட்டு தாய் மண்ணை வணங்குவது தானே தேசபக்தியாக இருக்க முடியும். இங்கே இந்துத்வா எங்கிருந்து வந்தது? நீங்கள் உங்கள் தாயை வணங்க மாட்டீர்கள் என்றால், வேறு யாரை வணங்கப் போகிறீர்கள்? அப்ஸல் குருவையா?

யாராவது பாரத் மாதாகி ஜே என்று சொன்னால், அவர்கள் பாரதமாதா என்ற தேவதையை வணங்குவதாக மட்டுமே அர்த்தமில்லை. பாரதமாத என்பவர் யார்? அந்த உருவில் இருப்பது  இந்தியாவின் 125 கோடி மக்கள் அல்லவா? பாரத் மாதகி ஜே என்றால், ஜாதி, மத, இன வேறுபாடு அற்ற ஒட்டுமொத்த இந்தியர்களையும் அந்தப் பெயரால் வணங்குகிறோம் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள்!

1995 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இந்துத்வா என்றால் அது மதத்தைக் குறிக்கவில்லை. அது ஒரு வாழ்க்கை முறை. அதை மதத்தின் பெயரால் குறுக்க வேண்டியதில்லை. இந்துயிஸம் என்பது குறுகிய கருத்து அல்ல, அது இந்தியாவின் பரந்த கலாச்சாரக் கருத்தாக்கம்.

இந்துயிஸம் இந்தியாவின் பரந்து பட்ட கலாச்சாரம் மற்றும் மரபு சார்ந்த வாழ்க்கைமுறையாகப் பல்லாயிரக்கணக்கான தலைமுறையைச் சேர்ந்தவர்களால் பின்பற்றப்பட்டு வரப்பட்ட அற்புதமான விஷயம். இங்கே வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறை அனைவருக்கும் ஒன்றே!

மேலும் அவர் இந்துயிஸம் பற்றி விளக்கம் அளிக்கையில், இந்தியாவின் மீதும், இந்துக்களின் மீதும் ஒவ்வொருமுறையும் டாம், டிக், மற்றும் ஹாரி என அந்நியர்கள் படையெடுத்து வந்திருக்கலாம், நம்மை ஆட்சி செய்திருக்கலாம், இந்தியாவைக் கொள்ளையடித்திருக்கலாம். ஆனால், இந்தியர்கள் எந்த நாட்டின் மீதும் படை கொண்டு சென்று தாக்குதல் நிகழ்த்தியதில்லை. ஏனெனில் இந்திய கலாச்சாரம் அப்படிப்பட்டது. என்றார் வெங்கய்யா.

நமது கலாச்சாரம் நமக்கு வசுதேவ குடும்பம் எனும் கொள்கையின் படி உலகையே ஒரு குடும்பமாகக் கருதும் சிறந்த வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அசோக் சிங்கால் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், அவர் ஒரு சிறந்த இந்துத்வா தலைவர்களில் ஒருவர். தனது வாழ்வின் கடந்த 75 வருடங்களை இளம் தலைமுறையின் எதிர்கால நலன்களுக்காக அர்ப்பணித்தவர்களில் மிக முக்கியமானவர் அவர்.

அடிப்படையில் பொறியியல் மற்றும் விஞ்ஞான மாணவராக இருந்த போதிலும் தனது வாழ்வை கங்கைக் கரைகளில் செலவளித்து மதம், சமுதாயம் மற்றும் கலாச்சாரப் பிரதிநிதியாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் அதிகப்படியாக ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பியவர்களில் ஒருவர் அசோக் சிங்கால். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஒரு மனிதராக தன்னை இந்துத்வாவுக்காக அர்பணித்துக் கொண்டு தீவிரப் பிரச்சாரகராக செயலாற்றி வருகிறார். என்றும் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com