2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!

தற்போது உலகின் மிகப்பெரிய  5 பொருளாதார மையங்கள் எனக்கருதப்படும் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இருந்து ஐக்கிய நாடுகள் மற்றும் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐந்தாம் இடத்தை 2018 ஆம் ஆண்டுக்குள் இந்த
2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!

லண்டனை மையமாகக் கொண்ட 'பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம்' ஒன்று சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் இந்தியா கூடிய விரைவில் 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும் என உறுதியான சான்றுகளுடன் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது உலகின் மிகப்பெரிய  5 பொருளாதார மையங்கள் எனக்கருதப்படும் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இருந்து ஐக்கிய நாடுகள் மற்றும் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐந்தாம் இடத்தை 2018 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அடையும்.

அதுமட்டுமல்ல இந்த வளர்ச்சியானது 2032 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொருளாதார மையங்களில் மூன்றாம் இடத்துக்கு நகர்த்திச் செல்லவும் வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு பிரதான காரணமாக அந்த ஆய்வறிக்கை முன் வைப்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தான்.

2016 ஆம் ஆண்டு நவம்பரில் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தற்போதைய நிலையில் உலகின் பெரிய பொருளாதார மையங்களில் 7 ஆம் இடம் வகிக்கும் இந்தியா மூடிய விரைவில் 5 ஆம் இடத்துக்கு வர பெரிதும் வாய்ப்புள்ளதாக லண்டனைச் சேர்ந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டக்ளஸ் மெக்வில்லியம் தெரிவித்துள்ளார். மேலும் மலிவான எரிசக்தி மற்றும் டிஜிட்டல் புரட்சி இரண்டும் தான் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை எட்ட உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com