ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை கோக், பெப்சி விற்க மாட்டோம்: வணிகர் சங்கப் பேரவை முடிவு!

ஜல்லிக்கட்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான ஊற்றுக்கண்களை திறந்திருக்கிறது என்ற வகையில் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம் என்ற வகையில் பெருமை கொள்வோம்!
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை கோக், பெப்சி விற்க மாட்டோம்: வணிகர் சங்கப் பேரவை முடிவு!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை அந்நியநாட்டு தயாரிப்புகளான கோக், பெப்சி உள்ளிட்ட குளிர்பானங்களை விற்க மாட்டோம் என தேனி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு இன்று அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர் சங்கங்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் இருந்து கடலலையாய் ஆர்ப்பரிக்கும் மாணவத் திரள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், குழந்தை, குட்டிகளுடன் பெண்கள், புதிதாகத் திருமணமான ஜோடிகள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைத்து தரப்பிலான மக்களும் தங்களது தொடர் போராட்டத்தை தை பொங்கல் திருநாள் கழிந்த மூன்று நாட்களின் பின்னும் சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தைப் பொங்கல் தொடங்குவதற்கு முந்தைய நாட்களில் ஜல்லிக்கட்டை மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருந்த இந்த போராட்டமானது, இப்போது தமிழக விவசாயிகள் தற்கொலை விவகாரம், காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை, அந்நிய நாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான விழிப்புணர்வு, நாட்டு மாடுகளை அழிக்க நினைக்கும் பன்னாட்டு வணிக அமைப்புகளின் சதியிலிருந்து பாதுகாப்பு எனப் பல்வேறு கோரிக்கைகளுடன் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வணிக சங்கப் பேரவையினர் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய மாட்டோம் என அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது. ஒரு வேலை இன்றூ நிகழ இருக்கும் தமிழக முதல்வர், பாரதப் பிரதமர் சந்திப்பில் ஜல்லிக்கட்டு விசயத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை எனில் இந்தப் போராட்டத்திற்கான கோரிக்கைகளில் மேலும் பல மக்கள் நல, நாட்டு நலக் கோரிக்கைகள் இணையலாம் என நம்பலாம்.

இதுவரையிலான எழுச்சிக்கே உலகெங்கிலும் வாழும் இந்தியர்களிடமிருந்து, தமிழர்களிடமிருந்து மிக நல்ல வரவேற்பு கிட்டியிருக்கிறது என்பதை ஊடகங்கள் காணொலியாக ஒளிபரப்புவதில் இருந்து  மக்கள் அனைவரும் கண்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகையால் ஜல்லிக்கட்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான ஊற்றுக்கண்களை திறந்திருக்கிறது என்ற வகையில் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம் என்ற வகையில் பெருமை கொள்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com