போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தின் கம்பாலா முற்றிலும் மாறுபட்டது. கம்பாலாவில் எருமைகள் பங்கு கொள்கின்றன. இருபுறமும் நுகத்தில் பூட்டப்பட்ட எருமைகளை தங்களது வயல்களில் மிக விரைவாக ஓட
போராட்டத்தால் ஜல்லிக்கட்டு தடை நீங்குமென்றால் கம்பாலா தடையையும் நீக்க முடியும்: கர்நாடகா!

தமிழகத்தில் தன்னெழுச்சியாக வீறு கொண்டெழுந்த மாணவப் போராட்டத்தின் விளைவாக மாநில அரசு நெருக்கடிக்கு உள்ளாகி பின்னர் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பட்டு அவசர வரைவுச் சட்டம் இயற்றப் பட்டு நடைமுறைப் படுத்தப் பட்டது. தற்போது அது நிரந்தர சட்டமாக்கப்படவும் மாநில அரசு முயன்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் நிகழ்த்தப் பட்ட மாணவப் போராட்டத்தின் வெற்றியைக் கண்டு இவர்களை முன்னுதாரணமாக்கி கர்நாடக கம்பாலா ஆதாரவாளர்களிடையே அங்கும் மக்கள் போராட்டம் நிகழ்வதற்கான மிகப்பெரிய ஒருங்கிணைப்பு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தின் கம்பாலா முற்றிலும் மாறுபட்டது. கம்பாலாவில் எருமைகள் பங்கு கொள்கின்றன. இருபுறமும் நுகத்தில் பூட்டப்பட்ட எருமைகளை தங்களது வயல்களில் மிக விரைவாக ஓட விடுகின்றனர். இதில் எருமைகள் தனித் தனி குழுக்களாக ஒன்றன் பின் ஒன்றாகத் தான் ஓட விடப்படுகின்றன. இதைப் போட்டி என்று சொல்ல முடியாது. இது கர்நாடகத்தின் கடற்கரையோர கிராமங்களில் பின்பற்றப் பட்டு வந்த ஒரு கலாச்சார நிகழ்வு. தங்களது கால்நடைகளை நோயிலிருந்தும், பிணிகளிலிருந்தும் காக்கும் தங்களது கிராம தேவதைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உடுப்பி மற்றும் மங்களூரு உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த விளையாட்டு நடைபெறும். இதையும் பீட்டா அமைப்பினர் எருமைகளுக்கு எதிரான மிருக வதை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு தடை செய்து விட்டனர்.

கம்பாலாவை காண்பதற்கான வீடியோ லிங்க்;

தற்போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை நீங்க மாணவப் போராட்டம் மூலம் மாநில அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட முடியுமெனில், கர்நாடகாவிலும் ஏன் அதைச் செய்ய முடியாது?. நாமும் நமது கலாச்சார உரிமைகளுக்காக தமிழகத்தைப் பின்பற்றி போராடுவோம். போராட்டம் குறித்து வரும் புதன் மற்றும் வியாளக்கிழமையில் மைசூரு, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கம்பாலா ஆதரவாளர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் குதிப்போம். நாடே நம்மைத் திரும்பிப் பார்க்கட்டும். என்று கர்நாடகத்தில் கம்பாலா ஆதரவாளர்கள் பேசி வருகிறார்களாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com