அமெரிக்காவுக்கு பி.ஹெச்.டி. முடித்த வெளிநாட்டினர் தான் தேவையாமே!

அமெரிக்காவில் ஹெச் 1-பி விசா அடிப்படையில் தாற்காலிகமாக பணிபுரிவதற்கு வெளிநாடுகளில் இருந்து பி.ஹெச்.டி பட்டதாரிகளும், கணினி விஞ்ஞானிகளும் வர வேண்டும்; ஆனால், நடுத்தரமான தகவல் மேலாண்மை தொழிலாளர்களே அதிக
அமெரிக்காவுக்கு பி.ஹெச்.டி. முடித்த வெளிநாட்டினர் தான் தேவையாமே!

"அமெரிக்காவில் ஹெச் 1-பி விசா அடிப்படையில் தாற்காலிகமாக பணிபுரிவதற்கு வெளிநாடுகளில் இருந்து பி.ஹெச்.டி பட்டதாரிகளும், கணினி விஞ்ஞானிகளும் வர வேண்டும்; ஆனால், நடுத்தரமான தகவல் மேலாண்மை தொழிலாளர்களே அதிகம் வருகின்றனர்'' என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டாம் காட்டன் கூறினார்.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவரும், ஆளும் குடியரசுக் கட்சியின் செனட் சபை உறுப்பினருமான அவர், அந்நாட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

வெளிநாடுகளில் இருந்து ஹெச் 1-பி தாற்காலிக விசா அனுமதி பெற்று வந்தாலும், நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு பெற்று வந்தாலும், உலகம் முழுவதில் இருந்தும் மிகச் சிறந்து விளங்கும் நபர்களே அமெரிக்காவுக்கு வரவேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருவோர் பி.ஹெச்டி. முடித்து அல்லது கணினி விஞ்ஞானிகளாக வருவதில்லை. மாறாக, நடுத்தரமான தகவல் மேலாண்மை தொழிலாளர்களே அதிகம் வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து திறமையானவர்கள் வர வேண்டும் என்ற எங்களது நோக்கம் பல நேரங்களில் நிறைவேறுவதில்லை. தகுதியில்லாத நபர்களுக்கு மாற்றாக வேறு நாடுகளைச் சேர்ந்த தகுதியுடைய தொழிலாளர்களை பணியில் நியமிக்கும்போது தேவையற்ற சர்ச்சைகள் எழுகின்றன. எனவே, வெளிநாடுகளில் இருந்து பணியில் அமர்த்தும் முறைகளில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இதையே அதிபர் டிரம்ப்பும் திட்டமிட்டு வருகிறார்.

மேலும், இங்குள்ள அமெரிக்கர்கள் செய்ய மாட்டார்கள் என்று எந்த வேலையும் கிடையாது. சரியான ஊதியம் கிடைத்தால் எந்த வேலையையும் அவர்கள் செய்
வார்கள்.

எனவே, அமெரிக்கர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பவும், அவர்களுக்கு அதிக ஊதியம் கிடைக்க வழிவகை செய்யவும் கவனம் செலுத்தி வருகிறோம்.
கனடா, ஆஸ்திரேலியோ போன்ற நாடுகள் தகுதியின் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்து வருகின்றன. அதே நடைமுறையை அமெரிக்காவிலும் பின்பற்ற வேண்டும் என்று அதிபர் டிரம்ப் விரும்புகிறார் என்றார் அவர்.

இதனிடையே, திறமையான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக, ஹெச் 1-பி விசா வழங்குவதை, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அரசு கடந்த வாரம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com