புதைக்கப்பட்ட பெண்ணின் பிணத்தைத் தோண்டி எடுத்த திருடர்கள்: தங்கத்துக்காகவாம்!

பழங்கால ராஜாக்களை அவர்கள் இறந்த பின் அவர்களுக்குப் பிடித்தமான பொருட்கள் மற்றும் நகைகளுடன் புதைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதைப் போலத்தான் இருக்கிறது இந்த பிரேமா பாய் சம்பவம்
புதைக்கப்பட்ட பெண்ணின் பிணத்தைத் தோண்டி எடுத்த திருடர்கள்: தங்கத்துக்காகவாம்!

கர்நாடக மாநிலம், கல்புர்கி பகுதியின் கஜூரி கிராமத்தைச் சேர்ந்த பிரேமா பாய் தாகே சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு குழந்தைகள் இல்லை. வாரிசுகள் எவரும் இல்லாத காரணத்தால் அவரது சடலம் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு அவருக்குச் சொந்தமான 50 கிராம் தங்க நகைகளுடன் புதைக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்த திருடர்கள், நேற்று முன் தினம் பிரேம் பாயின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி 6 அடி ஆழத்தில் இருந்த சடலத்தை கண்டடைந்து அதிலிருந்த 50 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடித்தவர்கள் கொஞ்சமும் மனிதாபிமானமே அற்றுப் போய் நகையைத் திருடியதுமல்லாமல், திருடிய பின் பிணத்தை மீண்டும் குழியில் இட்டு புதைத்து விட்டுச் செல்லாமல் அப்படியே குழிக்கு வெளியே கிடத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். மறுநாள் காலையில் இந்த அவலகரமான திடுக்கிடும் காட்சியைக் காண நேர்ந்த மக்கள் திகிலில் உறைந்து காவல்துறைக்கு புகார் அளிக்கவே தற்போது இந்த திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பழங்கால ராஜாக்களை அவர்கள் இறந்த பின் அவர்களுக்குப் பிடித்தமான பொருட்கள் மற்றும் நகைகளுடன் புதைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதைப் போலத்தான் இருக்கிறது இந்த பிரேமா பாய் சம்பவம். பிரேமா பாயை தங்க நகைகளுடன் புதைத்தது தான் புதைத்தார்கள், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டாமோ?! நாடிருக்கும் நிலையில் திருடர்களுக்குப் பிணமென்று பரிதாபமோ, மனிதாபிமானமோ இருக்குமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்?! இறந்தவர்களைப் புதைக்கும் போது நகைகளுடன் புதைப்பதைக் காட்டிலும் அவர்கள் பெயரைச் சொல்லி ஏதாவது காப்பகங்களுக்கு அந்த நகைகளுக்குண்டான தொகையை இறந்தவர் பெயர் சொல்லி தானமாகக் கூட அளித்திருக்கலாம். குறைந்த பட்சம் இறந்தவரின் புண்ணியக் கணக்காவது இந்து தர்மப்படி அதிகரித்திருக்கும். எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி 50 கிராம் நகையுடன் புதைக்கப்பட்டு இன்று மரணத்தின் பின்னும் நிம்மதியாகத் துயில் கொள்ள முடியாமல் தோண்டி எடுக்கப்பட்ட பிரேமா பாயின் சடலத்திற்கு நேர்ந்த கதி அதிர்ச்சிகரமானது மட்டுமல்ல! ஆச்சர்யப்படத்தக்கதும் தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com