பாரம்பரிய சமையல் பாத்திரங்கள் மற்றும் சுவையான சத்தான சிறுதானிய உணவுவகைகளை tredyfood.com-ல உடனே ஆர்டர் பண்ணுங்க!

ருசி பிரியர்களுக்கு பிடித்தமான ஆன்லைன் இணையதளமான Tredyfoods.com மில் சத்தான, சுவையான  சிறுதானியங்களில் செய்யப்பட்ட சேமியா

ருசிப் பிரியர்களுக்கு பிடித்தமான ஆன்லைன் இணையதளமான Tredyfoods.com மில் சத்தான, சுவையான  சிறுதானியங்களில் செய்யப்பட்ட சேமியா, நூடுல்ஸ், அவல் மற்றும் பாரம்பரியமான மாக்கல் பணியாரக்கல் (Soapstone Paniyarakkal) போன்றவை புதுவரவாக  விற்பனைக்கு வந்துள்ளது.  

சோப் ஸ்டோன் பணியாரக் கல்:

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சமையல் பாத்திரங்களை விற்பனை செய்யும் Tredyfoods.com-மில் சோப் ஸ்டோன் பணியாரக் கல் விற்பனை செய்யப்படுகிறது. ஆரம்ப காலத்தில், மண்பாண்டத்தில் உணவு சமைத்து, அவற்றை சாப்பிட்டு வந்தவர்கள், நீண்ட ஆயுளுடன் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ்கின்றனர். மண்பாண்டம் போலவே சோப் ஸ்டோன் எனப்படும் மாக்கல் சமையல் பாத்திரங்கள் பாரம்பரியம் கொண்டவை. இந்தக் கல்லில் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்களுக்கு கேரள மாநிலத்தில் இப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. சோப் ஸ்டோனில் செய்யப்பட்ட பணியாரக் கல்லில் சுடப்படும் பணியாரத்திற்கு சுவை அதிகம் என்கின்றனர் உணவுப் பிரியர்கள்.

சோப் ஸ்டோன் பணியாரக் கல் சமமாக, சீராக வெப்பத்தை உட்கிரகித்து தக்க வைக்கும் தன்மை கொண்டது. கல் சட்டிகள் சீராக வெப்பம் அடைவதால் இதில் சுடப்படும் பணியாரம் பொன்னிறமான கிடைக்கிறது. நிறமும், மணமும், சுவையும் அலாதியானது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பணியாரம் சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுகிறது. நீண்ட காலத்திற்கு உழைக்கக் கூடியது இந்த பணியாரக் கல். சோப் ஸ்டோன் பணியாரக் கல்லில் சுடச்சுட சுவையான பணியாரம் சுட்டு சாப்பிட ஆசையா? உடனே Tredyfoods.com மில் ஆர்டர் செய்தால் பத்திரமாக வீடு தேடி வரும் பணியாரக்கல்.

சோப் ஸ்டோன் பாத்திரங்களை பழக்குவது எப்படி:

சோப் ஸ்டோன் பாத்திரங்களை சமையல் செய்யும் அளவிற்கு பழக்குவது ஒரு கலை. சோப் ஸ்டோன் பணியாரக் கல் வாங்கிய உடனேயே அதை அடுப்பில் வைத்து சமைத்து பணியாரத்தை சுட்டு விட முடியாது. குறைந்தது 10 நாட்களுக்காவது பழக்க வேண்டும். பணியாரக் கல்லை சமையல் எண்ணெய், மஞ்சள் தூள் போட்டு குழைத்து நன்றாகத் தடவி வைக்க வேண்டும். நான்கு நாட்கள் கழித்து அதை சுடு நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பின்னர் சூடான அரிசி கஞ்சி தண்ணீரை ஊற்றி சோப் ஸ்டோன் பணியாரக் கல்லை ஊற வைக்க வேண்டும். இதே போல 3 நாட்கள் செய்து பழக்கப்படுத்த வேண்டும். பின்னர் ஸ்டவ் பற்ற வைத்து மிதமான சூட்டில் பணியாரக் கல்லை தண்ணீர் ஊற்றி சூடு செய்ய வேண்டும். இப்போது பணியாரக் கல் சுடும் அளவிற்கு பழகிவிட்டது. சுடச்சுட பணியாரத்தை சுட்டு சாப்பிடலாம்.

இது புதுவரவு:

பரபரப்பான இன்றைய காலத்தில் சிறுதானியங்களில் உணவு சமைக்க பலருக்கும் நேரம் இருப்பதில்லை. இன்றைய காலத்திற்கு ஏற்ப உடனடி உணவுகளான நூடுல்ஸ், சேமியாவின் சுவைக்கு அடிமையானவர்களுக்காக சத்தான சிறுதானியங்களில் செய்யப்பட்ட நூடுல்ஸ், சேமியா, அவல், புட்டு மாவு போன்றவைகளை Tredyfoods.com-மில் விற்பனை செய்கின்றனர்.  பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சத்தான சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ், சேமியாவை உடனடியாக செய்து கொடுக்கலாம் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.  

விதவிதமான பலகாரங்கள், ஊறுகாய் வகைகள், மரத்தினால் ஆன பாத்திரங்கள், பித்தளை, தாமிரம், இரும்பு பாத்திரங்கள் விற்பனை செய்யும் Tredyfoods.com மில் புதுவரவாக சிறுதானியங்களில் செய்யப்பட்ட சாமை சேமியா, வரகு சேமியா, கம்பு சேமியா, ராகிசேமியா, ராகி புட்டு மாவு, கோதுமை ரவை, சோளம் ரவை, குதிரைவாலி ரவை, தினை ரவை, ராகி ரவை, வரகு ரவை, கோதுமை நூடுல்ஸ் வித் மசாலா, சோளம் நூடுல்ஸ் வித் மசாலா, குதிரைவாலி நூடுல்ஸ் வித் மசாலா, தினை நூடுல்ஸ் வித் மசாலா, கம்பு நூடுல்ஸ் வித் மசாலா,  சோளம் அவல், சோதுமை அவல், ராகி அவல் விற்பனைக்கு வந்துள்ளது. கூடவே நாட்டு சர்க்கரை, ரெடிமிக்ஸ் தொக்கு வகைகள், ஊறுகாய்களும், பேரீட்சம்பழமும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆயிரக்கணக்கில் பொருட்கள்:

இவ்ளோதானா என்று நினைக்க வேண்டாம் சாத்தூர் சேவு, மணப்பாறை முறுக்கு என ஊர் பெருமை சொல்லும் இனிப்பு, கார தின்பண்டங்களை விற்பனை செய்யும் Tredyfoods.com-மில்  நிலக்கடலை இனிப்பு உருண்டை, ஹோம் மேட் கோவா நெய் ஜாமூன், குருக்கத்தி ராகி பக்கோடா, குருக்கத்தி கம்பு மாவு உருண்டை, குருக்கத்தி ராகி முருக்கு,  திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் மிக்சர் என நாவிற்கு ருசி ஊட்டும் பலகாரங்கள், பேரிட்சம்பழங்கள்,  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலகாரங்கள், காபி பவுடர் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களும் Tredyfoods.com-மில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எந்த மூலையில் இருந்து எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் அவை பாதுகாப்பாக பத்திரமாக உங்கள் வீடு தேடி வரும். இந்தியா  மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை ஆர்டர் செய்யலாம். Tredyfoods.com-மில் ஒருமுறை ஆர்டர் செய்து  பலகாரங்களை ருசித்து பாருங்க... அப்புறம் அதன் சுவையையும் பொருட்களின் தரத்தைப் பற்றியும் நீங்களே அனைவருக்கும் எடுத்து சொல்வீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com