பாகிஸ்தான் தேர்தல் களேபரங்கள்... சுயேட்சை வேட்பாளரின் ஏடாகூடமான பிரச்சார புகைப்படங்கள்... டோண்ட் மிஸ் இட்!

இவர் சுயேட்சையாகக் களமிறங்குவது ‘ஆம் ஆத்மி பாகிஸ்தான்’ கட்சியின் சார்பில். அந்தக் கட்சியின் பிரதான கொள்கைகளில் முக்கியமானவை நாட்டின் சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, சுத்தம் உள்ளிட்டவை.
பாகிஸ்தான் தேர்தல் களேபரங்கள்... சுயேட்சை வேட்பாளரின் ஏடாகூடமான பிரச்சார புகைப்படங்கள்... டோண்ட் மிஸ் இட்!

இந்த பாகிஸ்தானி சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் பிரச்சார அட்ராசிட்டிகளைப் பாருங்கள். வரப்போகும் தேர்தலுக்காக மனிதர் பொது மக்களிடையே ஓட்டுக் கேட்கும் முறையைப் பார்த்தால் குபீரென்று இருக்கிறது. உலகில் எந்த அரசியல்வாதியும் இப்படியொரு வினோதமான முறையில் ஓட்டுக் கேட்டிருக்க மாட்டார்கள். அரசியல் ஆர்வம் மிக்கவர்கள் கண்டிப்பாக தவற விடக்கூடாத புகைப்படங்கள் இவை. டோண்ட் மிஸ் இட்.

பாகிஸ்தானில் இது தேர்தல் நேரம்... தேர்தல் வெகு நெருக்கத்தில் இருக்கிறது. கராச்சியைச் சேர்ந்த அயாஸ் மெமோம் மோட்டிவாலா எனும் இந்த சுயேட்சை வேட்பாளர் தான் போட்டியிடும் ஆம் ஆத்மி பாகிஸ்தான் எனும் கட்சியின் சார்பாக பொதும் மக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார். எப்படி தெரியுமா? அதைத்தான் இன்று உலகமே கண்டு வியந்து கொண்டிருக்கிறது. இப்படியெல்லாமா ஒரு சுயேட்சை வேட்பாளர் ஓட்டுக் கேட்கக் கூடும் என்ற அதிர்ச்சியில் கராச்சி மக்கள் மூக்கின் மேல் விரலை வைத்து மூடிக் கொண்டு, தலைச்சுற்றலையும், குமட்டலையும், வாந்தியையும் அடக்கிக் கொண்டு நான்கடி தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு இருக்கிறது அவரது ஓட்டுக் கேட்கும் பாணி.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் பிறகு நீங்களே ஒப்புக் கொள்ளக்கூடும்.

குப்பை மீது அமர்ந்து கொண்டு ஓட்டுக் கேட்பு...


கழிவுநீர் தேங்கிக் கிடக்கும் இடங்களில் படுத்துக் கொண்டு ஓட்டு கேட்பு...


குப்பைத் தொட்டிக்குள்ளேயே இறங்கி ராஜா மாதிரி உட்கார்ந்து கொண்டு ஓட்டு கேட்பு...


பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி ஓட்டுக் கேட்பு...

இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த வினோதமான தேர்தல் பிரச்சார பாணிக்கான காணொளி...

ஓட்டுச் சேகரிப்பிலும், பிரச்சாரத்திலும் இம்மாதிரியான வினோதமான முறைகளை இவர் ஏன் பின்பற்றுகிறார் என்றால், அதற்கும் அவரிடம் விளக்கம் இருக்கிறது. இவர் சுயேட்சையாகக் களமிறங்குவது ‘ஆம் ஆத்மி பாகிஸ்தான்’ கட்சியின் சார்பில். அந்தக் கட்சியின் பிரதான கொள்கைகளில் ஒன்று நாட்டின் சுகாதாரம், சுற்றுப்புறத் தூய்மை, சுத்தம் உள்ளிட்டவை. எனவே அவற்றின் முக்கியத்துவத்தை மக்களிடையே மிகத்தீவிரமாகப் பதிய வைக்கும் நோக்கில் அவர் இப்படியெல்லாம் வித்யாசமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக விளக்கமளித்திருக்கிறார்.

என்ன இருந்தாலும், தெற்காசிய நாடுகளின் தேர்தல் பிரச்சார உத்தியில் இது ரொம்பப் புதுசு தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com