தினமணி இணையதளம் நடத்திய மெகா சமையல் போட்டி ‘சென்னையின் சமையல் ராணி - 2018’ வெற்றியாளர்கள்!

இல்லத்தரசிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பங்கு பெற்று கலக்கிய சென்னையின் சமையல் ராணி 2018 நிகழ்ச்சி ருசிக்கத் தக்க பல்வேறு சுவைகளுடன் வெற்றிகரமாக இனிதே நடந்து முடிந்தது.
தினமணி இணையதளம் நடத்திய மெகா சமையல் போட்டி ‘சென்னையின் சமையல் ராணி - 2018’ வெற்றியாளர்கள்!

தினமணி இணையதளம் சார்பில், சென்னையின் சமையல் ராணி - 2018 என்ற மாபெரும் சமையல் போட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தினமணி இணையதளம் சார்பாக இந்த மெகா சமையல் போட்டியின் டைட்டில் ஸ்பான்ஸர்களாக ஏஞ்சல் ஸ்டார்ச் & ஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தாரும்,  இணை ஸ்பான்ஸர்களாக கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தாரும், கிஃப்ட் ஸ்பான்ஸர்களாக வைப்ரண்ட் நேச்சர், டப்பர்வேர் நிறுவனத்தாரும் இணைந்து செயல்பட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் கலந்துகொண்டனர். போட்டியை கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸ்ஸர்ட் என்ற மூன்று பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்  கலந்து கொண்டு கொடுக்கப்பட்ட 1 மணி நேரத்தில் கச்சிதமாகச் சமைத்துப் பரிமாறி அசத்தினர். அனைவரது ரெஸிப்பிகளுமே சுவையாக இருந்த போதும் சமையல் கலையில் தேர்ந்த அனுபவம் கொண்ட நடுவர்கள் ஒவ்வொரு மெனுவில் இருந்தும் சிறந்த ரெஸிப்பிகளில் மேலும் நனி சிறந்த மூன்று ரெஸிப்பிகளைத் தேர்ந்தெடுத்தனர்.

இப்போட்டியில், ஸ்டார்ட்டர் பிரிவின் வெற்றியாளர்களை சமையல்கலை வல்லுநர் மீனாட்சி பெட்டுகோலா, மெயின் கோர்ஸ் பிரிவின் வெற்றியாளர்களை சமையல் கலை வல்லுநர் மல்லிகா பத்ரிநாத், டெஸ்ஸர்ட் பிரிவின் வெற்றியாளர்களை சமையல் கலை வல்லுநர் ரேவதி ஆகியோர் தேர்வு செய்தனர். இப்போட்டியை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பியது.

நியூஸ் 7 வீடியோ லிங்க் 1 ...

நியூஸ் 7 விடியோ லிங்க் 2...

வெற்றியாளர்கள்...

மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக தினமணி இணையதளம் சார்பில் ரூ.5000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டன. இரண்டாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.3000, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும், மூன்றாவது இடம் பெற்றவர்களுக்கு ரூ.2500, சான்றிதழ், வெற்றிக்கேடயம் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. இவை தவிர, போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

  • ஸ்டார்ட்டர்: முதல் பரிசு - தீபா மேத்தா, இரண்டாம் பரிசு - பாயல் ஜெயின், மூன்றாம் பரிசு - லட்சுமிகாந்தம்.
  • மெயின் கோர்ஸ்: முதல் பரிசு - பேனசீர் ஷாகுல், இரண்டாம் பரிசு - சத்யா, மூன்றாம் பரிசு - அனுராதா.
  • டெஸ்ஸர்ட்: எலிஸா, இரண்டாம் பரிசு - மாதவி, மூன்றாம் பரிசு - ஸ்வேதா.

இப்போட்டியை, எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர்கள் லக்ஷ்மி மேனன், விக்னேஷ் குமார், எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு துணைப் பொது மேலாளர் மாலினி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியின் இடையே எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி மாணவிகளின் மெல்லிசைக்குழுவினர் தங்களது ரம்மியமான பாடல்கள் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். 

நிகழ்ச்சி நடைபெற்ற எம் ஓ பி வைஷ்ணவ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் மெகா சமையல் போட்டியின் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் கோ ஆப்டெக்ஸ், ஃபுடிக்ஸ், வைப்ரண்ட் நேச்சர், டப்பர் வேர், எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பினாக்கிள் புக்ஸ் பதிப்பகம், ப்ரீத்தி மிக்ஸி உள்ளிட்டோரது ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.

சமையல் என்பது ஒரு அருங்கலை, முன்பெல்லாம் வீட்டுச்சாப்பாடு என்பது சகஜமானதாகவும், ஹோட்டல் சாப்பாடு என்பது அரிதானதாகவும் இருந்த நிலை மாறி இந்தத் தலைமுறையினரில் ஹோட்டல் சாப்பாடு என்பது சகஜமானதாகவும், வீட்டுச்சாப்பாடு என்பது அரிதான விஷயமாகவும் மாறிக் கொண்டிருப்பதால் இப்படியான மெகா சமையல் போட்டிகள் அவசியமாகின்றன. ஏனெனில், இப்படியான சமையல் போட்டிகளின் வாயிலாக ஹோட்டலில் மட்டுமே கிடைக்கக் கூடிய விதமான வித்யாசமான தனித்துவமான ரெஸிப்பிகளையும் கூட பெண்கள் வெகு எளிதில் கற்றுக் கொண்டு செய்து அசத்துகின்றனர். அந்த வகையில் இல்லத்தரசிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பங்கு பெற்று கலக்கிய சென்னையின் சமையல் ராணி 2018 நிகழ்ச்சி ருசிக்கத் தக்க பல்வேறு சுவைகளுடன் வெற்றிகரமாக இனிதே நடந்து முடிந்தது.

கலந்து கொண்ட போட்டியாளர்கள், வெற்றியாளர்கள் அனைவருக்கும் தினமணி இணையதளத்தின் மனமார்ந்த நன்றி!

மீண்டும் அடுத்த போட்டியொன்றில் இனிதே கைகோர்ப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com