சிரியாவில் வான்வழித் தாக்குதலில் 35 பேர் பலி

சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.
சிரியாவில் வான்வழித் தாக்குதலில் 35 பேர் பலி

சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷியாவின் படைகள் இணைந்து ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தில், சிரிய மற்றும் ரஷ்ய படைகள் நேற்று வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிச் சிறுவர்கள் உள்பட 35 பேர் பலியானதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புதெரிவித்தது.

சிரியாவின் கிழக்கு எல்லையோரத்தில் அமைந்துள்ளது இத்லிப் மாகாணம். இராக்கையொட்டியுள்ள அந்நாட்டின் எல்லைப்புறப் பகுதிகள் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் காரணமாக அங்கு சிரியா போர் விமானங்களும் ரஷிய போர் விமானங்களும் கடுமையாகத் தாக்குதல்கள் நிகழ்த்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com