நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: வாக்குகள் எண்ணப்படவுள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ள பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்டஆட்சியர் டாக்டர் சத்யேந்திர சிங் துர்சாவத் இன்று முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட உள்ள பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரியில் மாவட்டஆட்சியர் டாக்டர் சத்யேந்திர சிங் துர்சாவத் இன்று முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுத்தாக்கல் 26-ம் தேதி தொடங்கி வரும் நவம்பர் 2-ம் தேதி வரை நடக்கிறது.
வாக்குகள் எண்ணிக்கை வரும் நவம்பர் 22-ம் தேதி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள வசதிகள், கட்டமைப்பு குறித்து ஆட்சியர் சத்யேந்திர சிங் ஆய்வு மேற்கொண்டார்.
வாக்கு எண்ணிக்கை அறை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
மாவட்ட துணை ஆட்சியர் பி.தில்லைவேல், தொகுதி தேர்தல் அதிகாரி வ.மலர்க்கண்ணன், வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் ஆட்சியர் துர்சாவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும். இதுதொடர்பாக முதல் கட்ட ஆய்வு செய்யப்பட்டது.
இப்பணியில் தொடர்புடைய துறைகளாந உள்ளாட்சி, பொதுப்பணித்துறை, மின்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை,தேர்தல் துறை அதிகாரிகளுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
வாக்குகள் எண்ணிக்கையின் போது இக்கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். எத்தனை காவலர்கள் என்பது தேர்தல் ஆணைய வழிகாட்டுதல் படி மேற்கொள்ளப்படும்.
2 கம்பெனி மத்திய போலீஸ் படையினர்
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெணி மத்திய ஆயுதப் போலீஸ் படையினர் (200 வீரர்கள்) வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். தேர்தலுக்கு 8 நாள்களுக்கு முன்பு அவர்கள் வருவர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் துர்சாவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com