ஆகஸ்ட் 31-ம் தேதி பி.எஸ்.எல்.வி., சி.39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்!

ஆகஸ்ட் 31-ம் தேதி விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-39 (PSLV C39) ராக்கெட்டுக்கான
ஆகஸ்ட் 31-ம் தேதி பி.எஸ்.எல்.வி., சி.39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்!

ஆகஸ்ட் 31-ம் தேதி விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-39 (PSLV C39) ராக்கெட்டுக்கான கவுண்டவுன் நாளை (ஆகஸ்ட் 30, 2017) தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடல் சார்ந்த ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஹெச் (IRNSS-1H) செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதன் படி ஏற்கனவே திட்டமிட்டபடி 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. இவற்றில், முதலில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதால், புதிதாக ஐ.ஆர்.என்.எஸ்.1 எச் என்ற செயற்கைக்கோளினை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ள இந்த ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டுவிட்டன. தற்போது எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 31-ம் தேதி மாலை விண்ணில் ஏவப்பட உள்ள இந்த ராக்கெட்டுக்கான 29 மணிநேர கவுண்டவுன் நாளை நண்பகல் 1.59 மணிக்கு துவங்கும். மாலை 6.59 மணிக்கு இந்தக் கவுண்டவுன் முடிவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் பாயும். 

இஸ்ரோ பல சாதனைகளை படைத்து வருகிறது. உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவில் பல்வேறு புதிய ராக்கெட் தொழில்நுட்பங்களில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. ஐ.ஆர்.என்.எஸ்.1 எச் செயற்கைக்கோளால் இயற்கை சீற்றம், கடல் கொந்தளப்பு, போன்ற கடல்சார்ந்த விஷயங்களைக் கண்காணிக்க முடியும் என்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com