டிவிட்டரில் இணைந்தார் மலாலா! 

பெண் கல்விக்காக தொடர்ந்து போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசிஃப் ரசாய்
டிவிட்டரில் இணைந்தார் மலாலா! 

பெண் கல்விக்காக தொடர்ந்து போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசிஃப் ரசாய் நேற்று (7.7.2017) பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். புதிதாக டிவிட்டர் கணக்கு தொடங்கிய அவர், முதல் பதிவாக 'இன்று எனது பள்ளிப் பருவத்தின் கடைசி நாள். டிவிட்டரில் எனது முதல் நாள். பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டது வருத்தம்தான் என்றாலும், எதிர்காலத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். லட்சக்கணக்காக பெண்கள், பள்ளிப் படிப்பைக் கூட முடிக்க முடியாத சூழலில் இருக்கின்றனர். அடுத்த வாரம் முதல் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவுக்கு பயணம் செய்து அங்குள்ள பெண்களைச் சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 

மலாலாவின் முதல் டிவீட்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.. டிவிட்டர் கணக்கு தொடங்கி சில மணி நேரத்திலேயே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் அவரைப் பின் தொடர்கின்றனர். கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு வாழ்த்து தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் உட்பட உலகின் பல பிரமுகர்களும் மலாலாவை வாழ்த்திப் பதிவிட்டுள்ளனர்.  டிவிட்டரிலிருந்தும் அவருக்கு வரவேற்பு பதிவு அனுப்பப்பட்டது.  

மலாலா 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பெண் குழந்தைகள் கல்வி குறித்து குரல் எழுப்பியதற்காக தொடர்ந்து தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். தைரியமான பெண் என்பதைக் குறிக்கும் ‘ஸிதாரே-எ-ஸுஜாத்’ எனும் உயரிய பொதுமக்கள் விருதை பாகிஸ்தான் அரசு இந்த தைரியசாலிப் பெண்ணுக்கு அளித்து கெளரவப்படுத்தியது. பெண் கல்விக்காக போராடத் தொடங்கிய மலாலாவை உலகமே பாராட்டியது. இத்துடன் கணக்கில் அடங்காத கொலை மிரட்டல்களும் மலாலாவுக்குக் கிடைத்தன. அவரது செயல்பாடுகளை பாராட்டி, அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு 2014 -ல் வழங்கப்பட்டது. தற்போது, மலாலாவுக்கு, 20 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com