சாம்பியன்ஸ்டிராபி: கோப்பையை வென்றது பாகிஸ்தான் அணி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 180  ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ்டிராபி: கோப்பையை வென்றது பாகிஸ்தான் அணி

லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 180  ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆட்டத்தின் துவக்கம் முதல் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணி  வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தனர்.
இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே ரன் குவிக்க தவறினர்.
இந்திய அணி வீரர்களான தவான் 21 ரன்களும், கோலி 5 ரன்களும், தோனி 4 ரன்களும், ஜாதவ் 9 ரன்களும் , ஜடேஜா 15 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்திய அணியில் அதிக பட்சமாக  ஹார்த்திக் பாண்டியா 70 ரன்களும், யுவராஜ் சிங் 22 ரன்களும் எடுத்தனர்.
இதனால் இந்தியஅணி  30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து  158 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com