அமைதியான மனதும் ஆனந்தமான வாழ்க்கையும் வேண்டுமா?

சட்ட வல்லுநர்களுக்கான ‘சட்டம் மற்றும் ஆன்மிகம்’ என்பது பற்றிய தேசிய கருத்தரங்கம்
அமைதியான மனதும் ஆனந்தமான வாழ்க்கையும் வேண்டுமா?

சட்ட வல்லுநர்களுக்கான ‘சட்டம் மற்றும் ஆன்மிகம்’ என்பது பற்றிய தேசிய கருத்தரங்கம் பிரம்மா குமாரிகள் சார்பாக அக்டோபர்   29 - ம் தேதி சுங்குவார்சத்திரத்திலுள்ள ஹாப்பி வில்லேஜில் நடைபெற்றது.

S.J. ஜனனி (இசை இயக்குநர் & பாடகர் சகோதரி) அவர்களின் இறை  வணக்கத்தோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. வந்திருந்த விருந்தினர்களை வரவேற்கும் விதமாக ஜெ. ஜெயலலிதா நாட்டியாலயா குழுவினரின் நடனத்தை தொடர்ந்து அவர்களுக்கு பூச்செண்டு கொடுத்து பிரம்மா குமாரிகள் சகோதரிகள் வரவேற்றனர். மூத்த இராஜயோக ஆசிரியை கலாவதி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின், சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கினார்கள்.

கருத்தரங்கத்தின் பகுதியாக அமைதியான மனம், ஆனந்தமான வாழ்க்கை என்ற தலைப்பில் சகோதரி கவிதா அவர்கள் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை வைத்திருக்க வேண்டியதின் அவசியம், அதற்கான வழிகளை மற்றும் தியானத்தின் பங்கினைப் பற்றி எடுத்துரைத்தார்.

பி. கு. ஆஷாஜி, இயக்குநர், ஓம் சாந்தி ரிட்ரீட் சென்டர், புதுடில்லி & பிரம்மா குமாரிகள் நிர்வாகத்துறையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அவர்கள் முக்கிய உரை நிகழ்த்தினார்.

'மனிதர்கள் ஆரம்ப காலத்தில் இயற்கையுடனும், தன்னுடனும், பிறரிடமும் இசைந்து வாழ்ந்து வந்தனர்.  நாளடைவில் உடல் என்ற நினைவில் வந்து அனைத்தையும் மறந்து விட்டோம். இயற்கையின் விதிகளை மீறி விட்டோம். சிலர் கேட்கின்றனர், நேர்மையின்றி நடப்பவர்கள் நன்றாக வாழ்கிறார்களே என்று. ஆனால் கர்மத்தின் விளைவு தவறாது. தவறு இழைத்தவர்கள் ஒருபோதும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ முடியாது. நீதித்துறையை சார்ந்த நீங்கள் யோசித்து யோசித்து பார்த்ததால் தெரியும் அனைத்து வழக்குகளுக்கு பின்னால் இந்த ஐந்து விகாரங்களான காமம், கோபம், மோகம், பற்று, அகங்காரம் ஆகியவை கண்டிப்பாக இருக்கும்’ என்று கூறினார். 

மாண்புமிகு நீதிபதி Dr. P. ஜோதிமணி, (உறுப்பினர், தேசிய பசுமை தீர்ப்பாயம், தென்னிந்தியா, சென்னை) அவர்கள் கூறுகையில், 'நீதிபதியை இறைவனுக்கு அடுத்தபடியாக பார்க்கின்றனர். ஆனால் நாம் இறைவனை நேர்மையான கடவுள் என்று கூறுவதில்லை. நீதிபதியை கூட நாம் நேர்மையானவர் என்று கூற வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், அவர்கள் அதற்கு கடைமைபட்டவர்கள். அது அவர்களின் முக்கிய தகுதி ஆகும். ஆன்மிகக் கல்வி அதற்கு உதவி செய்யும் ஏனென்றல் ஆன்மிகம் நிறைந்தவர் தவறு செய்வதற்கு பயப்படுவார்.’

மாண்புமிகு நீதிபதி Smt. புஷ்பா சத்யநாராயணா, சென்னை உயர் நீதிமன்றம் அவர்கள் கூறுகையில், 'புத்தக அறிவு மட்டும் போதாது, அத்துடன் அவற்றின் நடைமுறையும் வேண்டும். நீதித்துறையில் பணி புரிய மனதில் தெளிவும் வேண்டும் என்றார். மாண்புமிகு நீதிபதி V. ஈஸ்வர்ரையா, முன்னாள் தலைவர், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் குழு & ஆந்திர பிரதேச முன்னால் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி.  

பிரம்மா குமாரிகள் இயக்கத்தை பற்றி சகோதரி பி.கு. பீனா (சேவை ஒருங்கிணைப்பாளர், பிரம்மா குமாரிகள் தமிழக மண்டலம்) அவர்கள் எடுத்துரைத்தார். B.K.B.L. மகேஸ்வரி, பிரம்மா குமாரிகளின் நீதித் துறை சேவையின் தலைமை நிர்வாகி அவர்கள் கல்வியில் குணங்களை கற்றுத் தருவதன் மூலம் மிகுந்த நன்மை ஏற்படும் என்று அவருடைய உரையில் கூறினார்.

B.K. புஷ்பா (பிரம்மா குமாரிகளின் நீதி துறை சேவையின் தேசிய இயக்குநர்) தனது உரையில்,  நற்குணங்களை நாம் ஆன்மீக பயிற்சி மூலம் எளிதாகப் பெற முடியும் மற்றும் நம்முடைய மனத்தை நாம் ராஜயோக பயிற்சி மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றார். பி.கு. லதா R. அகர்வால் (பிரம்மா குமாரிகள் நீதி துறை தேசிய ஒருங்கிணைப்பாளர்) மூத்த வல்லுநர்கள் இறுதி செய்த உறுதிகளை எடுத்துரைத்தார். வந்திருந்த அனைவரும் அதனை வழிமொழிந்து வரவேற்பதாகவும் அனைவருக்கும் எடுத்துரைப்பதாகவும் கூறினார்கள்.

அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் சக்திசாலியான மன நிலையை அனுபவம் செய்வதற்கான ராஜயோக பயிற்சியை மூத்த ராஜயோக ஆசிரியை பி.கு. முத்துமணி அவர்கள் செய்வித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த முக்கிய விருந்தினர்களுக்கு பி.கு. ஆஷாஜி அவர்கள் இறை நினைவு பரிசினை அளித்தார்கள்.  மூத்த ராஜயோக ஆசிரியை பி.கு. தேவி அவர்கள் இறுதியில் நன்றியுரை கூறினார்.  நிகழ்ச்சியை பி.கு. சுந்தரேசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

பிற்பகலில்  முக்கிய பிரமுகர்களின் கலந்துரையாடல் மற்றும் நிறைவு நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com