ஓணம் சீசனில் கேரளாவில் மதுபான விற்பனை ரூ.440.6 கோடியை எட்டியது!

கேரளாவில் ஓணத்திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 25-ம் தேதி 
ஓணம் சீசனில் கேரளாவில் மதுபான விற்பனை ரூ.440.6 கோடியை எட்டியது!

கேரளாவில் ஓணத்திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை பத்து நாட்களுக்கு கேரளாவில் இப்பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த சீசனில், ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். மதுப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த மது பானங்களை அருந்தியும் நண்பர்களுக்கும் விருந்தளித்தும் மகிழ்வார்கள். இதனால் கடந்த பத்து நாட்களாக மதுபானம் விற்பனை ரூ.440.6 கோடியை எட்டியது. இதற்கு முந்தைய வருடத்தில் இது ரூ.411.14 கோடியாக இருந்தது என்கிறது புள்ளி விபரம்.

ஆகஸ்ட் 25-ம் தேதி ஆரம்பித்த இந்த விற்பனைக் கணக்கு கடந்த ஞாயிறுடன், அதாவது செப்டம்பர் 3-ம் தேதியில் முடிவடைந்தது. அதிலும் ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் ரூ.71.17 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதற்கு முந்தைய வருடத்தில் ரூ. 59.51 கோடிக்கு விற்பனையாகியிருந்தது. தவிர திருச்சூர் மாவட்டத்தில் இரன்ஜலகுடாவில் ரூ. 29.46 கோடி மதுபான விற்பனை பதிவாகியுள்ளது.

விற்பனையில் ரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவிகிதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிராந்தியும், மூன்றாம் இடத்தில் பீர் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

கேரள மதுபான விற்பனை கழகம் தான் இம்மாநிலத்தில் மொத்த மதுபான விற்பனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மது விற்பனையில் கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com