ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்போம்! டிடிவி தினகரன் ட்விட்டரில் கோரிக்கை!

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி பிரச்னையில் அரசியலை புகுத்தும் பாஜக அரசின்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்போம்! டிடிவி தினகரன் ட்விட்டரில் கோரிக்கை!

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி பிரச்னையில் அரசியலை புகுத்தும் பாஜக அரசின் செயற்பாட்டினை கண்டித்து தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. போதிய நீர் இல்லையெனில் உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும். மேலும், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட நாசகார திட்டங்களுக்கு தமிழகத்தையே தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் நயவஞ்சக செயல்களை எதிர்த்து மக்கள் கடுமையான போராடி வருகிறார்கள்.

ஏப்ரல் 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது. மக்கள் போராட்டத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் வண்ணம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யுமாறு தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு - காவிரி உரிமை மீட்பு கூட்டமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், ஆர்.கே நகர் சட்ட மன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது,

'காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட்  ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகளின் வேதனையில் பங்கெடுக்கும் விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என நாள்தோறும் நடத்தி தங்கள் உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்திவரும் இந்த நேரத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீர்ப் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் நமக்கு இழைக்கும் துரோகத்திற்கு எதிராக தமிழகமே பொங்கி எழுந்திருக்கிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com