தீர்ந்தது ஒரு ரசமான பிரச்னை! ரஸகுல்லா ஒரு 'பெங்கால் ஸ்வீட்'தான்! 

இனிப்பு பிரியர்கள் தவிர்க்க முடியாத ஒரு ஸ்வீட் ரசகுல்லா. வங்காளத்தை பூர்விகமாக கொண்ட
தீர்ந்தது ஒரு ரசமான பிரச்னை! ரஸகுல்லா ஒரு 'பெங்கால் ஸ்வீட்'தான்! 

இனிப்பு பிரியர்கள் தவிர்க்க முடியாத ஒரு ஸ்வீட் ரசகுல்லா. வங்காளத்தை பூர்விகமாக கொண்ட இந்த இனிப்பு இந்தியா முழுவதும் பரவலாக விற்பனையாகி இனிப்பு பிரியர்களின் விருப்பத்துக்குரியதாக உள்ளது. இந்நிலையில் ரசகுல்லாவுக்கு ஒரு சோதனை வந்தது. அதன் பூர்விகம் எதுவென்ற கேள்விதான் அது.

உண்மையில் ரசகுல்லா வங்காளத்துக்கு சொந்தம் தானா? இல்லை. இல்லையில்லை ரசகுல்லா எங்கள் உணவு என்று ஒடிசாக்காரர்கள் கூறுகிறார்கள். இதன் காரணம் புதிரானது. ஒரு காலத்தில் ஒடிசா வங்காளத்துடன் இணைந்திருந்தது. அப்போது ஒடிசாவின் முதன்மொழியே பெங்காலிதான். ஆனால் ஒடிசா பிரிந்த பின்னர் இந்நிலை மாறியது. மாநிலத்தின் முதன்மை மொழியாக ஒடிசா மாற்றப்பட்டது. இருந்தாலும் வங்காளம் - ஒடிசா உறவு தொடர்கிறது. 

பூரியில் ஜகந்நாதரை தரிசிக்கச் சென்றால் அங்கு ஒடிசாக்காரர்களை விட கூடுதலாக வங்காளியரைத்தான் காண முடியும்.  அது மட்டுமல்ல...கொல்கத்தா மற்றும் வங்காளத்தில் மிகப்பெரிய மனிதர்கள் வீடுகளில் சமையலுக்கு ஒடிசா பிராமண சமையல்காரர்கள் தான் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அறிமுகப்படுத்திய ரசகுல்லா தான் இன்று பெங்கால் இனிப்பு என பெருமைப் பேசப்படுகிறது. 

ஆக, உண்மையில் ரசகுல்லா ஒடிசாவுக்கே சொந்தம் என்று கூறி வருகிறது ஒடிசா.  ஒடிசா தனி மாநிலம் ஆகிவிட்டாலும் இன்றும் ஒடிசாவின் கட்டக் நகர் செல்லும் வங்காளத்தவர்கள், அங்கு தன்னை ஒடியாக்காரர் போலவும், வங்காளத்தின் மித்னாபூரில் நுழைந்து விட்டால், வங்காளிகளாகவும் காட்டிக் கொள்வது உண்டு. மித்னாவூர் என்ற இடம் வங்காள - ஒடிசா எல்லையில் அமைந்துள்ளது. இவ்வகையில் ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெறுவதில் ஒடிஸாவுக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கடும்போட்டி நிலவி வந்தது. இரு தரப்பும், ரசகுல்லாவின் பிறப்பிடம் தங்கள் மாநிலம்தான் என்று வாதிட்டு வந்தன.

ரசகுல்லாவுக்கு, 'ஒடிஸா ரசகுல்லா' என்ற பெயரில் புவிசார் குறியீடு வழங்கக் கோரி அந்த மாநில அரசு விண்ணப்பித்தது. அதற்காக, சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில் ஒடிஸா மாநில சிறுதொழில் துறை கழகத்தின் (ஓஎஸ்ஐசி) மேலாண் இயக்குநர் ரத்னாகர் ராவத் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

இறுதியில் ரசகுல்லாவுக்கு மேற்கு வங்க அரசு கடந்த நவம்பர் மாதம் புவிசார் குறியீட்டைப் பெற்றது. இதனால் ஒடிஸா மக்கள் கடுப்படைந்தனர். அதையடுத்து, ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப் போவதாக, ஒடிஸா அமைச்சர் பிரஃபுல்லா சமல் கூறியிருந்தார். போலவே, ரசகுல்லாவுக்கு பிறப்பிடம் ஒடிஸா தான் என்றும், 12-ம் நூற்றாண்டில் இருந்தே ஜகந்நாதர் கோயிலில் அந்த இனிப்பு வகை படைக்கப்பட்டு வந்தது என்றும் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியிருந்தார்.

இவ்வாறு இருக்க, தற்போது அது பெங்காலி ஸ்வீட் என்ற பெருமையை மீட்டுக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com