லடாக்கிலுள்ள ராணுவ வீரர்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்த காரணம் என்ன?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் இந்திய - சீன எல்லையிலுள்ள
லடாக்கிலுள்ள ராணுவ வீரர்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்த காரணம் என்ன?

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் இந்திய - சீன எல்லையிலுள்ள லடாக் பகுதிக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களை நேரில் சந்தித்துள்ளார். மிகக் கடுமையான பனி, ஊசியாய் குத்தும் குளிர் போன்ற இயற்கை சூழல்களில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படுத்தும் நோக்கில் நிர்மலா சீதாராமனின் இப்பயணம் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. 

பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தோய்ஸ் எனும் இந்திய-சீன எல்லைப் பகுதிக்குச் சென்ற முதல் மத்திய அமைச்சர் அவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏர்ஃபீல்ட் என்றழைக்கப்படும் தெளலட் பெக் ஓல்டி எனும் பகுதிக்குச் சென்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.

அவருடைய இந்த விஜயம் குறித்து ராணுவ அமைச்சகம் கூறுகையில், நிர்மலா சீதாராமன் இந்திய - சீன எல்லையில் இருக்கும் தோய்ஸ் எனும் ராணுவப் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு ராணுவத்தினரின் செயல்பாடுகள் பற்றியும், எந்நேரமும் தயார் நிலையில் ராணுவப் படை இருப்பது குறித்துமான தகவல்களை விளக்கினோம் என்று கூறியது.

தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றிய நிர்மலா ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புணர்வை பாராட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com