ரவுடி ஆனந்தனை என்கவுண்டர் செய்தது ஏன்? போலீஸார் விளக்கம்

சென்னையில் அண்மையில் ரவுடிகள் சிலர் பேர் ராயப்பேட்டை காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ராஜவேலுவை
ரவுடி ஆனந்தனை என்கவுண்டர் செய்தது ஏன்? போலீஸார் விளக்கம்

சென்னையில் அண்மையில் ரவுடிகள் சிலர் பேர் ராயப்பேட்டை காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ராஜவேலுவை அரிவாளால் தாக்கி விட்டு தப்பியோடினர். ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் நடந்த சண்டையை தடுக்கச் சென்ற போதுதான் காவலர் ராஜவேலுவை தாக்கியுள்ளனர் 10 நபர்கள் அடங்கிய ரவுடி கும்பல். இதன் பின்னணியில் ரவுடி ஆனந்தன் என்பவர் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, அவனை கைது செய்ய காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.


இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு தரமணி அருகே ரவுடி ஆனந்தனை காவலர்கள் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவன் உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளான். இதனையடுத்து கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சனம் துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடி ஆனந்தனை சுட்டுக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த துப்பாக்கிசூட்டில் ரவுடி ஆனந்தனுடன் இருந்த மற்றொரு ரவுடி அரவிந்தன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆனந்தனின் உடல் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் மீது வழிப்பறி, கொலை உள்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இந்த என்கவுண்டர் தொடர்பாக நீதிபதி உரிய விசாரணையை நடத்துவார் என காவல்துறை இணை ஆணையர் அன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com